கவிதைச்சோலை!
உத்தமம்!சிறகு உள்ள வரைசிட்டுக்குருவியால்பறக்க முடியுமென்றால்உழைப்பு இருக்கும் வரைஉன்னாலும்உயர முடியும்!முயல் ஆமையிடம்தோற்றதற்குஎன்ன காரணம்?இயலாமை அல்லமுயலாமை தான்என்பதைமறந்து விடாதே!இதுவரைவாழ்ந்ததையெல்லாம்மறந்துவிட்டுஇன்றுபுதிதாய் பிறந்தோம்என்று எண்ணிசெயல்படுபழைய செடிகளில்பார் தினசரிபுதிய பூக்கள்!கட்டுமரக்காரனுக்குகடலின்கொந்தளிப்பும்தாலாட்டு தான்அதுபோலகடுமையாகஉழைப்பவனுக்குகண்ணீர் என்பதும்கானல் நீர்தான்என்பதைமறந்து விடாதே!கையூட்டு வாங்கிகாலா காலத்துக்கும்சொத்து சேர்ப்பதை விடகால் வயிற்றுக்கஞ்சிக்காககல் உடைத்துகாசு பார்ப்பதேகவுரவம்!ஆம்...ஊழலை மூலதனமாகக்கொண்டுஉல்லாசமாய்வாழ்வதை விடஉழைப்பைமூலதனமாகக்கொண்டு வாழ்வதே உத்தமம்!பெ. கருணைவள்ளல், சென்னை.