கவிதைச்சோலை!
சொல்லுதாயி என செல்லத்தாயி!மே 8, அன்னையர் தினம்அம்மாஉன் முந்தானை பிடிச்சு முகம் துடைச்சதுலமுல்லைப்பூவின் வாசம் மறந்து போச்சுநீ ஊட்டி விட்ட கைப்பிடி சோறுலகவலையெல்லாம் காத்தா பறந்து போச்சு!உன் விரலு பிடிச்சு நடை படிச்சதுலஉச்சி வானம் மெய்மறந்து போச்சுநீ பூமியில நட்டு வச்ச நாத்து வாசத்துலசத்தியமா சாமி கூட சரணடைஞ்சு போச்சு!உன் பாதம் பட்ட வாசல் முற்றத்துலவானம் கூட வேதம் படிக்குமே தாயி...நீ நின்னு நிமிர்ந்து நடந்தா நிலவிளக்குதானும் கண்ணு பட்டுப்போகுமே தாயி!பட்ட மரம் எட்டப் பார்த்தாலேபடபடத்துப் போவாயே எந்தாயிபட்டினி வயிறு பார்த்தா படுத்துறங்கஒம் பார்வைக்கு பலமேது தாயி!ஓங்கண்ணுக்குள்ள கருவிழியாநான் காட்சி தரணும் எந்தாயிஎந்த பகவானுக்கு படையல் போடணும்ன்னுசொல்லு தாயி... என் செல்லத்தாயி!உன் தோளு மேல துாங்கி எழுந்ததிலதுாளி ஆட்டமும் தோத்துப் போச்சுநீ விதைச்சு விட்ட வித்துல விருட்சமும்வெள்ளிக்காசா விளைஞ்சிருச்சு!ஒம் புன்னகை பார்த்து பூவானம் சிவக்கும்மண்ணிற்கும் மரமிற்கும் ஓங்குணமிருக்கும்நீ அம்மி அரச்சா வாசம் ஆகாசத்த துாக்கும்உன் அன்ப நினைச்சாபாண்டவர் பாசம் தோக்கும்!உன் சேல தொட்டிலில் ஒருவேளை துாங்கஎமன் கூட ஏங்கி கிடப்பான் தாயிநீ தொட்டில் கட்டி தாலாட்டு பாடினாதமிழ் கடவுளும் வந்து நிப்பான் தாயி!பொம்மைகள் புதையுண்டாலேபொங்கி அழுவாயே எந்தாயிஉன் பிள்ளை பிரிஞ்சா ஓங்கண்ணீருஓடி நிற்க உலகத்தில இடமேது தாயி!உன் கல்லறையிலும் நான் கருவா உருத்தரிக்கணும் எந்தாயிஎந்த கடவுளிடம் கையேந்தணும்ன்னுசொல்லு தாயி... என் செல்லத்தாயி!அ. ரேவந்த், எர்ணாகுளம், கேரளா.