கவிதைச்சோலை!
தந்தையின் (ஆ)தங்கம்! அன்பு மகனுக்குதந்தையர் தினத்தில்நிந்தைகள் சுமந்துகந்தையாகக் கிடக்கும்தந்தையரில் நானும் ஒருவன்!தினசரி உழைப்பில்சராசரி அப்பனைப் போலசாதாரணமாய் வாழ்ந்தாலும்அசாதாரணக் கனவுகளோடுஉயரத்தின் உச்சத்தில்உன்னை நிறுத்தியவன் நான்!நீ அதிகாரியாக வேண்டுமென்றுஅப்பா என்ற அதிகார நாற்காலியை அடகு வைத்தவன் நான்!தாயை இழந்த தவப்புதல்வனேசொந்தங்கள் இல்லாதவாழ்க்கைப் பந்தயத்தில்- நீபதக்கங்கள் பெற வேண்டுமென்றுஒற்றைக்கால் தவம் செய்தேன்!இருசக்கர வாகனம் கேட்டாய்உன் மனசு வலிக்கக் கூடாதென்றுதவணை கட்டி, கட்டி என் நெட்டை விரல்குட்டை விரலாய் தேய்ந்து போனது!என் சிறகுகளைத் துண்டித்துஉனக்கு செருப்புகள் செய்தேன்என் முதுகில் தான்உனக்கு பாதைகள் அமைத்தேன்!சின்ன சின்ன சித்திரங்களில்நினைவு விரல்களால்சிங்காரக் கோலங்கள் வரைந்தேன்!ஆனால்காலம் செய்தசட்டாம்பிள்ளைதனத்தால்என் வாழ்வின்பட்டாம்பூச்சி கனவுகள்இடி விழுந்த மண்பாண்டமாய்நொறுங்கிப் போனது!உன் காதல் மனைவிக்குகனவு இல்லம் கட்டுவதற்காகஎன் காலடி நிலத்தையும்உன் காலடியில் வைத்தேன்கடைசியில்ஒதுங்குவதற்கு கூட இடமின்றிஒதுங்கி கிடக்கிறேன்!ஆனாலும்நம்பிக்கைச் சிலுவையில்தொங்கிக் கொண்டிருக்கிறேன்உயிர் அறுந்து விழு முன்னேஅப்பா என்று விளித்தபடிஓடி வந்து பார்ப்பாய் என்று!என்.ஆசைத்தம்பி, சென்னை.