கவிதைச்சோலை!
அவர்கள்* அவர்கள்உணவை மறந்தவர்கள்...உறக்கத்தை இழந்தவர்கள்...நாட்டுக்கு உழைத்தவர்கள்...இழப்பதற்கு எதுவுமில்லாமல்இறந்தவர்கள்!* அவர்கள்தங்கள்வாழ்க்கையைக் கூட,'இரந்தவர்'களுக்குதந்தவர்கள்!* அவர்கள்...வீட்டையேநாட்டுக்குத் தந்தவர்கள்...அவர்களின் முகங்களால்முடிசூடிக் கொண்டுநாட்டையேவீட்டுக்குத் தந்தனர்இன்றையத் தலைவர்கள்!* எந்தச் சிம்மாசனத்தையும்அவர்கள்தலை நிமிர்ந்து பார்த்ததில்லை... இன்று...எந்தச் சிம்மாசனமும்அவர்களிடம்தலை நிமிர்ந்து நிற்பதில்லை!* அவர்கள்தங்கள் உதிரத்தையேநாட்டுக்காகவியர்வையாக்கியவர்கள்... விலையாக்கியவர்களும் அல்ல...விலையானவர்களும் அல்ல!* அவர்கள்'இருப்புகளால்'பேசப்பட்டவர்கள் அல்ல...அவர்கள்இழப்புகளால்பேசப்பட்டவர்கள்!* அவர்கள்தங்கள் வாழ்க்கையைரசித்தவர்கள் அல்ல...அவர்கள்வரலாறால் ரசிக்கப்பட்டவர்கள்...* அவர்கள்தியாகிகள்!— கி.சிங்காரவடிவேல், குன்றக்குடி.