கவிதைச்சோலை! - குழந்தைகளைக் கொண்டாடுங்கள்!
நவ., 14 - நேரு பிறந்தநாள்ஒவ்வொரு குழந்தையும்நாளைய மனித இனத்திற்கானவீரிய வித்துக்கள்!தேசங்களால் பிளவுபட்டாலும்அத்தனைக் குழந்தைகளுமேபரிசுத்த உள்ளம் படைத்தவை!அவர்களின் குரலுக்குமதிமயங்கிக் கிறங்காதவர்ஒருவருமே உலகிலில்லை!புதிது புதிதாகக் கேட்டிடும்கேள்விகளால் நம்மை அவர்கள்புதுப்பிக்கத் தவறுவதே இல்லை!சக குழந்தைகளுடன்அறியாமலேயே சண்டையிட்டுசடுதியில் சமாதானமாவர்!கிடைத்தது எதுவாகினும்யாரோடும் பகிர்ந்து கொள்ளும்பாடத்தைக் கற்பிப்பர்!பகைமை உணர்வு தெரியாதுபொறாமை குணம் கிடையாதுகலப்படமற்றது அவர்கள் புன்னகை!கிடைப்பதற்கரிய வரமாகவந்து பிறந்த குழந்தைகளைவதைக்காமல் கொண்டாடுங்கள்!சி. அருள்மொழி, கோவை.