கவிதைச்சோலை - தட்டிக் கொடுத்தால் வளர்கிறது
*வெற்றி — தோல்விகளுக்கானகாரணங்களைக் கண்டறிவதில்வெற்றி பெறுகிறதுவாழ்க்கை!* வெற்றிக்கான காரணம்உறுதி என்றால்...தோல்விக்கான காரணம்மறதி!*மறதியை மன்னிப்பவர்கள்வெற்றிப் பாதையிலிருந்துவிலகுகின்றனர்!*உறுதி —திட்டமிட வைக்கிறது...மறதியோதடுமாற வைக்கிறது!*உறுதியோடுமறதிஉக்கிரமாய்ப் போரிடும்!ஒருவேளைஉறுதி பின்வாங்கினால்...மறதி நிரந்தரமாய்குடியேறிவிடும்!*மறதி —மலர்சொரியும்மனோரஞ்சித மரமல்ல...வெற்றி மரத்தின்வேரறுக்கும் கரையான்!*ஆனால் —வெற்றி மரத்தின்விழுது உறுதி!*தட்டிக் கேட்காததால்வளர்கிறது மறதி!தட்டிக் கொடுக்கத்தட்டிக் கொடுக்கவெற்றி கொடுக்கும்கற்பக மரமாய்காலூன்றுகிறதுஉறுதி! — வளர்கவி, கோவை.