சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் இளவரசர் மச்சினி!
பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மனைவி, கேத் மிடில்டனுக்கு, ஒரு அழகான தங்கை உண்டு. பிப்பா மிடில்டன் என்பது, இவரது பெயர். இவரும், வில்லியமின் தம்பி, ஹாரியும், காதலித்து வருவதாக, முதலில் தகவல் வெளியாகி, பின், அந்த தகவல், தவறு என, அறிவிக்கப்பட்டது. இப்போது விஷயம், இவர்களின் காதலைப் பற்றியதல்ல; பிப்பாவின் சொந்த வாழ்க்கை பற்றியது. பிரிட்டனின், மிக பிரபலமான, 'வெயிட்ரஸ்' என்ற சூப்பர் மார்க்கெட்டில், சமீபத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார், பிப்பா. அதற்காக, சூப்பர் மார்க்கெட்டில், புளி, சீரகத்தை, பொட்டலம் போட்டுத் தரும் வேலை என, கற்பனை குதிரையை தட்டி விடாதீர்கள்.அந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனம், ஒரு பத்திரிகையை நடத்தி வருகிறது. அதில், சுவையான சமையல் டிப்ஸ்களை எழுதும் பணியில் தான், அவர் சேர்ந்துள்ளார். 'பிரிட்டன் இளவரசரின் மச்சினி, சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யலாமா?' என, யாராவது, பிப்பாவிடம் கேட்டால், 'எங்க அக்கா வேலை பார்த்தால் தான் தப்பு; நான் பார்த்தால் தப்பில்லை...' என, விளக்கம் அளிக்கிறார்.— ஜோல்னா பையன்.