நடிப்பை விட்டவர்!
பல ஆண்டுகளுக்கு முன்பு, மலையாள சினிமாவில் நடித்த, நடிகை நெய்யாற்றின்கர கோமளத்துக்கு இப்போது, 90 வயது ஆகிறது. 20 வயதில் நடிக்க வந்தவர், நான்கு ஆண்டுகள் மட்டும் தான் நடித்தார்.மறைந்த, பழம்பெரும் நடிகர் பிரேம்நசீரின் முதல் படத்தில் நடித்த கோமளம், வேறு ஒரு படத்தில் மட்டும் தான் நடித்தார். அன்று, பெண்கள் நடிக்க வர தயங்கியபோது, இவர் துணிச்சலுடன் நடிக்க வந்தார். ஆனால், அதிக படங்களில் நடிக்காமல், நடிப்புக்கு முழுக்கு போட்டார்.இவருக்கு பின் வந்த ஷீலா, சாரதா, ஜெயபாரதி போன்றவர்கள் தொடர்ந்து நடித்தனர். இவர், குடும்பத்தலைவியாக வீட்டிலேயே முடங்கி கிடந்தார். சமீபத்தில், செய்தியாளர்களிடம், 'அன்று, நடிப்பின் அருமை தெரியாமல் ஒதுங்கி விட்டேன். ஆனால், இன்று என், 90 வயதில், சோம்பேறித்தனத்தை நினைத்து வருத்தப்படுகிறேன்...' என்கிறார்.ஜோல்னாபையன்