உள்ளூர் செய்திகள்

ரகுராய்!

படத்தில் உள்ளவர் பெயர், ரகுராய்; வயது, 75; போபாலில், விஷ வாயு கசிந்து, பல ஆயிரம் மனித உயிர்களை பலி வாங்கிய போது, அதில், ஒரு சிசுவின் உடல், மண்ணால் மூடப்படும் காட்சி, அன்று, அனைவரையும் கலங்க வைத்தது. அப்புகைப்படத்தை எடுத்தவர் தான், இவர்.இன்றைய பாகிஸ்தானில் உள்ள ஜாங்கிலியில் பிறந்த இவர், இன்ஜினியர் பட்டதாரி. ஆனால், சில மாதங்களிலேயே, வேலைக்கு முழுக்கு போட்டு, கேமராவுடன் தெருவில் இறங்கினார்.இந்த வயதிலும், இளைஞர் போல கேமராவுடன் தெருக்களில் சுற்றி திரியும் இவர், பெரும்பாலான ஆங்கில பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா மற்றும் மதர் தெரசா போன்றோருடன் தங்கியிருந்து, அவர்களை ஏராளமான புகைப்படங்கள் எடுத்துள்ளார். 'தொழில் மீது அதிக ஈடுபாட்டுடன், தெருக்களில் அலைந்தால், அருமையான புகைப்படங்களை, எடுக்கலாம்...' என்கிறார் ரகுராய்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !