இப்படியும் ஒரு விசித்திர பழக்கம்!
பிரிட்டன் நாட்டு பெண்களிடம், ஒரு விசித்திரமான நடைமுறை உண்டு. அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், எந்த மாதிரி தோற்றமளிக்கின்றனரோ, அதேபோல், தாங்களும் தோன்ற வேண்டும் என, விரும்புவர். மறைந்த இளவரசி டயானாவின் ஸ்டைலை, ஏராளமான பெண்கள் பின்பற்றினர்.இப்போது, இளவரசர் ஹாரியின் மனைவியும், ஹாலிவுட் நடிகையுமான, மெகன் மார்க்கெல் அணியும் உடைகள், அவரது ஹேர்ஸ்டைல், வளையல் மற்றும் வாட்ச் போன்றவை, இளம் பெண்களிடையே பிரபலமாகி வருகிறது.இதெல்லாம் பரவாயில்லை; மெகன் மார்க்கெல் மூக்கைச் சுற்றி, சில கரும்புள்ளிகள் உள்ளன. இதேபோன்ற கரும்புள்ளிகள், தங்களுக்கும் இருக்க வேண்டும் என்பதற்காக, பல பெண்கள், அழகு நிலையத்துக்கு சென்று, மூக்கைச் சுற்றி, பச்சை குத்தி வருகின்றனர்.பிரிட்டன் இளம் பெண்களிடையே, மூக்கிற்கு அருகே, பச்சை குத்தும் பழக்கம், மிக வேகமாக பரவி வருகிறது. அழகு நிலையம் வைத்திருப்பவர்கள், செமத்தியாக, 'கல்லா' கட்டி வருகின்றனர். —ஜோல்னாபையன்.