வியாபாரத்தை பெருக்க இப்படி ஒரு ஐடியா!
தென் கிழக்காசிய நாடான, தாய்லாந்தின் பாங்காக் நகரில், 'கொரோனா'வால் முடங்கிய ஓட்டல் வியாபாரத்தை சூடுபிடிக்க வைக்க, பல்வேறு தந்திரங்களை கையாளுகின்றனர்.'கொரோனா' பிரச்னை காரணமாக, ஓட்டலில் அமர்ந்து உணவு சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. 'பார்சல்' மற்றும் வீடுகளுக்கு நேரடியாக சென்று உணவு வழங்குவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.'கரேஜ் 76' என்ற பிரபலமான ஓட்டலில், வியாபாரத்தை அதிகரிப்பதற்காக, புதுவிதமான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.பாகுபலி படத்தில் வரும், 'ஹீரோ' பிரபாஸ் போன்ற கட்டுமஸ்தான உடல் கட்டுடைய இளைஞர்களை, வீடுகளுக்கு உணவு, 'டெலிவரி' செய்வதற்காக, இந்த ஓட்டல் நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. 500 ரூபாய்க்கு மேல் உணவு, 'ஆர்டர்' செய்திருந்தால், தங்கள் வீட்டுக்கு, 'டெலிவரி' செய்ய வரும் கட்டுமஸ்தான இளைஞருடன் வாடிக்கையாளர்கள், 'செல்பி' எடுக்கவும் அனுமதி உண்டு.இது பற்றிய விளம்பரங்களை படித்த வாடிக்கையாளர்கள், அந்த ஓட்டல் உணவுகளை தாராளமாக, 'ஆர்டர்' செய்கின்றனர். 'ஆர்டர்' செய்பவர்களில் பெரும்பாலானோர் இளம் பெண்களாம். ஜோல்னாபையன்