உள்ளூர் செய்திகள்

கோடை ஸ்பெஷல்: வியர்வை தொல்லையா?

கோடையில் குழந்தைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கு எளிதாக கோடைகால நோய்கள் தொற்றிக் கொள்ளும். எனவே, செயற்கை இழை ஆடைகளைத் தவிர்த்து, காட்டன் மற்றும் மெல்லிய உடைகளை அணிவித்தல் நல்லது * தண்ணீரில் வசம்புத்துாள் போட்டு சுட வைத்து, ஆறியபின் இந்நீரால் குழந்தைகளைக் குளிக்க வைக்க, கோடை காலத்தில் ஏற்படும் சருமத் தொல்லைகள் தீரும் * நெல்லிக்காயை தண்ணீரில் சேர்த்து அரைத்து, உடலில் பூசி, சிறிது நேரம் கழித்துக் கழுவி வர வியர்க்குரு வராது. * கோடை காலத்தில் அதிகமாக, 'மேக்-அப்' போடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதிக, 'மேக்-அப்' வியர்வையை அதிகபடுத்தும் * அக்குள் பகுதியில், முடி இல்லாமல் பார்த்து கொண்டாலே வியர்வை நாற்றம் ஏற்படாது * கோடை காலத்தில் இருமுறை குளிப்பது புத்துணர்ச்சியைத் தரும். குளித்து முடித்ததும் தரமானப் பவுடர் அல்லது சிறிதளவில் சென்ட் பூசுங்கள் * குளிக்கும் நீரில் ஓரிரு துளிகள் சென்ட், டியோடரண்ட் அல்லது சந்தனம் சேர்த்துக் கொண்டால் உடல் கமகமக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !