உள்ளூர் செய்திகள்

கண்ணீர் புகை குண்டு ஐஸ்கிரீம்!

நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பிரதேசம், ஹாங்காங். வெளியுறவு கொள்கை, ராணுவம் ஆகிய விஷயங்களை தவிர, மற்றவைகளை ஹாங்காங் நிர்வாகமே மேற்கொள்ளலாம் என, சுதந்திரம் கொடுத்துள்ளது, சீனா. ஆனால், சமீப காலமாக, ஹாங்காங் மீதான தங்கள் பிடியை இறுக்கி வருகின்றனர், சீன ஆட்சியாளர்கள்.கடந்தாண்டு, ஹாங்காங்கில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, ஹாங்காங்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவோரை, சீனாவுக்கு நாடு கடத்த முடியும். இதற்கு ஹாங்காங் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தை ஒடுக்கியது, சீன ராணுவம். தற்போது ஹாங்காங்கில் அமைதி நிலவினாலும், கடந்தாண்டு நடந்த போராட்டத்தை நினைவு படுத்தும் விதமாக, இங்குள்ள கடைகளில், 'கண்ணீர் புகை குண்டு ஐஸ்கிரீம்' விற்பனை செய்யப்படுகிறது. மிளகு, மிளகாய் பொடி கலந்து தயாரிக்கப்பட்ட இந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டால், சிறிது நேரம் தொண்டை எரியும். கண்களில் எரிச்சல் இருக்கும். 'கண்ணீர் புகை குண்டு வீசினால் ஏற்படுவது போன்ற அனுபவம், இந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டால் வரும். கடந்தாண்டு போராட்டத்தின் போது நடந்த கசப்பான அனுபவங்களை, மக்களுக்கு நினைவூட்டவே, இதை விற்பனை செய்கிறோம். ஏராளமானோர், ஆர்வத்துடன் வந்து, இந்த ஐஸ்கிரீமை சாப்பிடுகின்றனர்...' என்கின்றனர், கடைக்காரர்கள்.ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !