உள்ளூர் செய்திகள்

மயான பூமி மணிகர்ணிகா!

இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர், கண்டிப்பாக காணத் துடிக்கும் இடம் எது தெரியுமா? உ.பி., மாநிலம், வாரணாசியில் உள்ள, மணிகர்ணிகா மயானம். கங்கையின் கரையில் அமைந்துள்ள இந்த மயானத்தில், 24 மணி நேரமும், பிணங்கள் வருவதும், எரிப்பதுமாக இருக்கும்.பலர், காசியில் இறந்து, மணிகர்ணிகா மயானத்தில் உடலை தகனம் செய்வதை விரும்புகின்றனர். காரணம், இங்கு இறந்து, தகனம் ஆகிறவர்களின் காதில், சிவனே, இறைவன் நாமத்தை ஓதுவதாக ஐதீகம். கூடுதலாக, இவர்களுக்கு அடுத்த பிறவியே இல்லை; முக்தி நிச்சயம் என்ற நம்பிக்கை உள்ளது.இதற்காகவே, தங்கள் சாவை எதிர்பார்த்து பலர், வாரணாசியில், பல இடங்களில் தங்கி காத்திருப்பர். இதை கேள்விப்படும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், அதை நேரில் கண்டு, படமெடுக்க துடிக்கின்றனர்.இந்த மயான பூமியில், கேமராவுடன் சுற்றும் வெளிநாட்டினரை, சகஜமாய் காணலாம்!- ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !