சமையல் அறை சுத்தமாக இருக்க...
* 'காஸ்' அடுப்பு மற்றும் சமையல் மேடையில், திரவ சோப்பை ஊற்றி நன்கு தேய்த்து, ஊற விடவும். அதன் பின் தண்ணீர் ஊற்றி துடைத்தால், எண்ணெய் பிசுக்கு அகன்று விடும்* கண்ணாடி பாட்டிலில் வீசும் துர்நாற்றம் போக்க, அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி, ஒரு சிட்டிகை கடுகு அல்லது சோடா உப்பு போட்டு குலுக்கி, ஊற வைத்து கழுவலாம்* சமையல் அறையில், எண்ணெய் பிசுக்கு ஒட்டி இருக்கும். 'டைல்சை' சாதாரண துணியால் துடைத்த பின், வெதுவெதுப்பான நீரில் சலவை சோடாவை கலந்து, பிசுக்கு உள்ள இடங்களில் பூசி, உலர்ந்த துணியால் துடைத்தால், 'பளிச்'சென மின்னும்.