மலைப்பாம்புகள் வளர்க்கும் சிறுமி!
பலரது வீடுகளில், நாய், பூனை, கிளி ஆகியவற்றை செல்லப் பிராணிகளாக வளர்ப்பது வழக்கம். ஆனால், தென் கிழக்காசிய நாடான, இந்தோனேஷியாவின் ஜாவா பகுதியில் வசிக்கும், சால்வா இஸ்மா என்ற, 14 வயது சிறுமி, ஆறு மலைப் பாம்புகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகிறார்.அதுவும், வீட்டுக்குள்ளேயே அவற்றை உலாவ விட்டு, விளையாடி வருகிறார். படுக்கை அறை, சமையல் அறை என, வீட்டின் எல்லா பகுதிகளிலும், இந்த பாம்புகள் சர்வ சாதாரணமாக வலம் வருகின்றன. சிறுமியுடனேயே இந்த பாம்புகளும் படுத்திருக்கின்றன. சிறுமியின் வீட்டில் உள்ளவர்களும், இந்த பாம்புகளுடன் நன்றாக பழகி விட்டனர். இதனால், பாம்புகளை பார்த்து, அவர்கள் பயப்படுவது இல்லை. அந்த வீட்டுக்குச் செல்பவர்கள் தான், இதைப் பார்த்து பீதி அடைகின்றனர். —ஜோல்னாபையன்