சுறாக்களுக்கு உணவூட்டும் அதிசய மனிதர் !
ஆழ் கடலில் உலா வரும், சுறாக்களை பார்ப்பதே, மிக அரிது. இந்நிலையில், அவற்றின் அருகில் செல்வதென்றால்... நினைத்து பார்க்கவே, குலை நடுங்குகிறதல்லவா? ஆனால், பிரேசிலை சேர்ந்த, வின்சென்ட் என்ற, ஆழ் கடல் நீச்சல் வீரர், கடலுக்கு அடியில் நீந்திச் சென்று, சுறாக்களுக்கு, உணவளித்து வருகிறார். 'டைகர் பீச்' என அழைக்கப்படும் ஆழ் கடல் பகுதியில், புலி சுறாக்கள் என அழைக்கப்படும், பயங்கர தோற்றமுடைய சுறாக்கள், அதிக அளவில் உள்ளன. இவற்றுக்கு தான், அன்னதானம் செய்து வருகிறார், வின்சென்ட். 'இது, எப்படி சாத்தியம்... பயமாக இல்லையா?' என, அவரிடம் கேட்டபோது, 'பயமாகத் தான் இருக்கும். ஆனால், முறையான பயிற்சி பெற்றால், இதை எளிதாக செய்யலாம்...' என்கிறார். ரொம்பவும் தில்லான மனிதராகத் தான், இருக்கிறார். — ஜோல்னா பையன்.