உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல ....

படம் தயாரிக்கும் இயக்குனர்கள்! 'பையா' படத்தை இயக்கிய லிங்குசாமி, தன் திருப்பதி பிலிம்ஸ் சார்பில், அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாரிக்கிறார். இதேபோல், ஹாலிவுட் நிறுவனத்துடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து, தொடர்ச்சியாக படம் தயாரிக்கிறார். இவர்கள் வரிசையில், கவுதம் மேனனும், ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கிறார். இந்த மூன்று பிரபல இயக்குனர்களுமே, தாங்கள் தயாரிக்கும் படங்களை இயக்கும் பொறுப்பை, புதுமுக இயக்குனர்களுக்கே வழங்கியுள்ளனர்.  —  சினிமா பொன்னையா.எம்.ஜி.ஆர்., பட பாடலில்  மாளவிகா!எம்.ஜி.ஆர்., நடித்த, 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் இடம்பெற்ற, 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்...' என்ற பாடல், 'பொறுத்திரு' படத்துக்காக, ரீ-மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. தினா இசையில் உருவான இப்பாடலில், 'வாளமீன்' மாளவிகா குத்தாட்டம் போட்டுள்ளார். இதே படத்தில், நீண்ட நாளைக்குப் பிறகு வசுந்தரா தாசும் ஒரு பாடலில் தோன்றி, நடனமாடுகிறார். பழைய பொன்னனே பொன்னன்; பழைய கப்பறையே கப்பறை!  —  எலீசா.இந்தி மார்க்கெட்   எகிறுமா?தமிழில் ஷங்கர் இயக்கிய, 'பாய்ஸ்' படம் தற்போது இந்திக்கு, 'டப்' செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏக குஷியில் இருக்கிறார் ஜெனிலியா. 'இந்தி சினிமா மார்க்கெட் இறங்கி வரும் இந்த நேரத்தில், இப்படம் ஹிட்டானால், என் மார்க்கெட் மீண்டும் எகிறிவிடும்...' என்கிறார். இந்த உற்சாகத்தோடு அப்படத்தில் தனக்குத்தானே டப்பிங் பேசியிருப்பதாகவும் கூறுகிறார். காணாதவன் கஞ்சியைக் கண்டானாம்; ஓயாமே ஓயாமே ஊத்திக் குடித்தானாம்! —  எலீசா.குதூகலத்தில் அமலா பால்!'சிந்து சமவெளி'யில் நடித்து, சர்ச்சைக்கு உள்ளான அமலா பால், இப்போது, 'மைனா' படத்தின் வெற்றியால், ராசியான நடிகையாகியுள்ளார். மேற்படி படத்தில், அவரது நடிப்பைப் பார்த்த சில முன்னணி இயக்குனர்கள், அமலாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், 'அனகா என்ற பெயரை கடாசிவிட்டு, அமலா பால் என்று பெயரை மாற்றிய நேரம்தான் என் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசுகிறது...' என்கிறார். தென்னையிலே தேள் கொட்டித் திருவையாற்றுக்கு நெறி கட்டியது போல!              —  எலீசா. ஆச்சரியப்படுத்திய  சாந்தினி!நடிக்க வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தான், 'மன்மதன் அம்பு' படத்தில் தனக்குத் தானே டப்பிங் பேசியுள்ளார் த்ரிஷா. ஆனால், நடித்துள்ள முதல் படமான, 'சிந்து +2'வில், தனக்குத்தானே டப்பிங் பேசி, பலரை ஆச்சரியப்படுத்திஉள்ளார் புதுமுக நடிகை சாந்தினி. இதுபற்றி அவரிடம் கேட்டால், 'மற்றவர்கள் நமக்கு டப்பிங் பேசுவதை விட, நடித்த நானே டப்பிங் பேசும்போது, அந்த கதாபாத்திரத்துக்கு கூடுதல் அழுத்தம் கிடைப்பதாக உணர்கிறேன்...' என்கிறார். அதிசயம் அடி அத்தங்காரே கொதிக்கிற குழம்பு சிரிக்கிறது!  —  எலீசா.ஜெயம் ரவியின் இரண்டு முகம்!அமீர் இயக்கும் ஆதிபகவன், பிரபுதேவா இயக்கும் எங்கெங்கும் காதல் என, ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. என்றாலும், ஒரு படத்தின் நடிப்பு சாயல் இன்னொரு படத்தில் விழுந்து விடாமலிருக்க, ஒரு படத்தில் நடித்து, சில நாட்கள் இடைவெளி விட்டே அடுத்த படத்தில் நடிக்கிறார். ஜெயம் ரவியின் இந்த முயற்சிக்கு இரண்டு பட இயக்குனர்களுமே ஒத்துழைப்பு கொடுப்பதோடு, அவர் கதையின் மூடுக்கு வரும் வரை பொறுமையாக காத்திருந்தே படப்பிடிப்பு நடத்துகின்றனர்.                                    —  சி.பொ.,நாள் சம்பளம் கேட்கும்  காமெடியன்கள்!இதுவரை வடிவேலு, விவேக் போன்ற காமெடி நடிகர்கள் மட்டுமே நாள் கணக்கில் சம்பளம் பேசி, நடித்து வந்தனர். இந்த வரிசையில், தற்போது, சந்தானம், கஞ்சா கருப்பு, சத்யன் ஆகியோரும் சேர்ந்துள்ளனர். இந்தப் பட்டியலில் இடம்பிடிக்க முத்துக்காளை, மயில்சாமி உள்ளிட்டோர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். - சினிமா பொன்னையா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !