உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம் !

புதுமையான சலூன்!சமீபத்தில், முடி வெட்ட ஒரு சலூன் கடைக்குச் சென்றேன். இனிய உபசரிப்பை பெற்று, உள்ளே நுழைந்த எனக்கு, ஆச்சரியம் தாங்கவில்லை. சுவரில் கவர்ச்சிகரமான போஸ்டர்கள், காலண்டர்கள் எதுவுமில்லை. தேவையான உபகரணங்கள் அனைத்தும் அலமாரியில் வைத்திருந்தனர். ஒரு பக்க சுவரில், 'வாடிக்கையாளர்கள் பகுதி' என்ற தலைப்பிட்டு, நோட்டீஸ் போர்டு ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அதில், நிறைய பேர் ஏதோ எழுதியிருந்தனர். சிலர் பழமொழி, பொன்மொழி, தத்துவங்கள், ஜோக்ஸ் போன்றவற்றை தாளில் எழுதி, குண்டூசியால் குத்தி வைத்திருந்தனர்; ஒரு சில ஓவியங்களும்  இருந்தன. கடைக்காரரிடம் இதுபற்றி விசாரித்தபோது, 'நாங்கள் வாடிக்கையாளர்களின் திறமையை வெளிக் கொண்டு வர நினைத்தோம். அதன்படி, சில வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தெரிந்த விஷயங்களை வெளிப்படுத்த இதை பயன்படுத்திக் கொண்டனர். 'ஒரு வாடிக்கையாளர், கவிதை, கடி ஜோக்ஸ், தத்துவம், பொன்மொழி போன்ற ஏதாவது ஒன்றை எழுதி வைப்பார். அது ஒரு வாரம் வரை நீடிக்கும். அவரது படைப்பின் கீழ் அவரது பெயர், பணி, படிப்பு ஆகியவை குறிப்பிடப்படும்...' என்றார். கடைக்காரர் கூறியபடியே, சில தகவல்களின் கீழ் ஆட்டோ டிரைவர், கட்டடத் தொழிலாளி, மாணவர்,  அரசு அதிகாரி என்றெல்லாம் காண முடிந்தது. நானும், என் பங்கிற்கு ஒன்றை எழுதி வைத்துவிட்டு வந்தேன். சலூன் கடைகளில் சிகரெட் குடித்துக் கொண்டு சினிமா, அரசியல் கதைகளை பேசி, காலத்தை வீணாக்குவதோடு, பிரச்னைகளையும் இழுத்துவிட்டு செல்வதற்கு பதில், இது நல்ல புதுமையான கலாசாரம் தானே! தங்களது திறமையை வெளிப்படுத்த, நண்பர்கள் வட்டம் விரிவடைய, உற்சாகம் தரும் இந்த முறை வரவேற்கத்தக்கதுதான். மற்ற சலூன் கடைக்காரர்களும் யோசிக்கலாமே!  —  மதிராஜன், மதுரை.கணவனுக்கு, 'கிள்ளு' வைத்தியம்!அண்மையில் ஒரு திரு மணத்துக்காக பாபநாசம் சென்றுவிட்டு, பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். மூவர் இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் இளம் பெண். நடுவில் அவள் கணவன். அடுத்து உட்புற இருக்கையில் நான். நடுவில் இருந்த கணவன் தூங்கியபடி மனைவி மீது சாய்ந்து கொண்டிருந்தான். அவளோ, 'மேலே சாயாதீங்க...' என்று அவன் தலையை தள்ளி தள்ளி நிமிர்த்தினாள். ஏழெட்டு  சாயலுக்கு பின், 'சொன்னா கேட்க மாட்டீங்களா...' என்று கணவனின் தொடையில் 'நறுக்' என ஒரு கிள்ளு கிள்ளினாள். அவ்ளோதான், அதன் பின் அந்த கணவனின் தூக்கம் போயே போச்சு! அசதியில் தூங்கும் கணவனுக்கு சற்று நேரம் தோள் கொடுத் தால் என்ன? மனைவிக்கு, என்ன குறைந்து விடப்போ கிறது. பப்ளிக் பிளேசில்  கணவனுக்கு அப்படி கிள்ளு வைத்தியம் செய்வதெல்லாம் சரிதானா? இது போன்ற பெண்மணிகள் சிந்திப்பரா? — கு.அருணாசலம், தென்காசி.ஜொள்ளர்கள் திருந்துவரா? என் தோழி வங்கியில் புதிதாக வேலைக்கு சேர்ந்தாள். வங்கியில் லோன் பிரிவில் வேலை பார்த்த அவள், தினமும் நூறு பேருக்காவது போன் செய்து, பர்சனல் லோன், வீடு கட்ட லோன், கார் வாங்க லோன் வேண்டுமா என்று பேச வேண்டும். அப்படி பேசும் போது, எதிர்முனை ஆண்கள் பேசும் ஜொள் பேச்சு, தோழிக்கு சங்கடத்தை தருகிறது.சில ஆண்கள், உங்களை சந்திக்கலாமா? நீங்கள் ஐஸ்வர்யாராய் மாதிரி இருப்பீங்களா... நயன்தாரா மாதிரி இருப்பீங்களா? உங்க நம்பர் கொடுங்க...'ன்னு, டன் கணக்கில் ஜொள் விடுவராம். தோழியோ, நான் என் வேலை நிமித்தமாக பேசித்தான் ஆக வேண்டியுள்ளது. ஆனால் சில  ஆண்கள், அதிக நேரம் கடலை போட்டு விட்டு, கடைசியில், 'எனக்கு கடன் வேண்டாம்; நேரம் இருந்தா அடிக்கடி கூப்பிடுங்கன்னு, 'ஜொள்ளை' கொட்டு கின்றனர்...' என்றாள். ஆண்களே... வேலை நிமித்தமாக பேசும் என் தோழி போன்ற பெண்களை, உங்கள் ஜொள் அலையால் மூழ்கடித்து, வேதனைப் படுத்தாதீர்கள்.   —- டி.ஜெயசீலி,  கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !