அந்துமணி பதில்கள்!
கே.ஆறுமுகம், கோவை: ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து, அரசியல்வாதிகள் குதிப்பதின் உள் அர்த்தம் என்னா?அந்தந்த ஜாதிகளை, 'தாஜா' செய்து, ஓட்டு வாங்குவதை விட, வேறு என்ன காரணம் இருக்க முடியும்! * எ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்: கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தீபாவளி அன்று, 'டாஸ்மாக்'கில் மது விற்பனை, 29 கோடி ரூபாய் குறைய காரணம் என்னவாக இருக்கும்?முன்னதாகவே, 'குடி'மகன்கள், 'ஸ்டாக்' செய்துவிட்டால், தீபாவளி அன்றைய கணக்கு உதைக்கத்தானே செய்யும்! மாதாந்திர கணக்கு வெளிவரும்போது, கூடி இருக்கும்!மு.நாகூர், ராமநாதபுரம்: 'நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது, தி.மு.க., தான்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாரே?எப்படி... போதையில் தள்ளாடும் தமிழகத்தைத் தானே சொல்கிறீர்கள்?ஜெ.ரவிக்குமார், காங்கேயம்:அடிக்கடி ஏதாவது ஒன்றை பேசி, நடிகை கஸ்துாரி சிக்கிக் கொள்கிறாரே...சினிமாவில் சான்ஸ் இல்லை என்றால், அரசியலில் குதித்துவிட வேண்டியது தானே! அதற்கு இந்த சர்ச்சைகள் எல்லாம் உதவும்! * ராஜாசிங், தஞ்சை: இந்த ஆண்டு, சிவகாசியில், 95 சதவீத வெடிகள், விற்றுத் தீர்ந்து விட்டனவாமே... இது வளர்ச்சியா?ஆமாம்! சீன வெடிகளை வாங்காமல், உள்ளூர் வெடிகளை வாங்கி, சிவகாசி மக்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளனரே!இ.கஸ்துாரி, பொட்டல்புதுார்: ஆபிஸ் பாய் ஆக இருந்த நீங்கள், 'அம்பாசிடர்' என்கிற துாதர் வைத்துக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்தது எப்படி? உங்களைப் போன்ற முதலாளிகளின் ஆதரவில் தான்!