உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

ந.மாலதி, துாத்துக்குடி: முதல்வரின் காலை உணவு திட்டத்தால், 90 சதவீதம் மாணவர்களின் ஞாபக சக்தி கூடியுள்ளதாக, தமிழக அரசின் திட்டக்குழு அறிக்கை கூறுகிறதே...நல்ல தமாஷ்!* கே.எல்.காந்தரூபி, மாங்காடு, காஞ்சிபுரம்: நடிகர் - நடிகையரின், 'கட்-அவுட்'டுக்கு பாலாபிஷேகமும், பூமாலையும் போட்டு வந்த ரசிகர்கள், தற்போது கோவில் கட்ட ஆரம்பித்து விட்டனரே... இது, அறிவுடைமையா அல்லது அறியாமையா?அறியாமையின் உச்சக்கட்டம்! காசை, நேரத்தை, அவரவர் குடும்பத்திற்காக செலவிடுவது, ரசிகர்களுக்கு நல்லது!சுஜீதா, சென்னை: நடுநிலை செய்தி; வாசகர்களின் எண்ணிக்கை - 'தினமலர்' நாளிதழின் பலம் எது?இரண்டும், இரண்டு கண்கள்!எம்.பி.தினேஷ், இடையர்பாளையம், கோவை: அந்துமணி பதில்கள் பகுதியில், நீங்கள் எழுதும் பதில்களை, பொறுப்பாசிரியர் சரி பார்ப்பதுண்டா?அவரின் தணிக்கை இன்றி, எதுவும் வெளியாகாது!பி.மோகன் ராஜு, சென்னை: முக்கிய சாலைகளில், மாடுகள் நடமாடுவதை, அரசால் தடுக்க முடியாதா?தடுக்க வேண்டும்; அப்போது தான், அவற்றால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க முடியும்!வி.சி.கிருஷ்ணரத்னம், செங்கல்பட்டு: மூட்டை மூட்டையாக, மருத்துவக் கழிவுகளை எடுத்து வந்து, தமிழகத்தில் கொட்டும் கேரளாவின் செயலை தடுக்க முடியாதா?எல்லையிலும், வனப்பகுதியிலும் சிலர் கையூட்டு வாங்குவதால் நடக்கும் அவலம் இது!ந.சண்முகம், திருவண்ணாமலை: 'ஜாதிய வட்டத்தில் என்னை, தமிழக மக்கள் சுருக்கி விட்டனர்...' என்கிறாரே, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்...அவர் தானே, வன்னியருக்கான கட்சி என்று, தன் கட்சியை பிரகடனப்படுத்திக் கொண்டார்... சமீபகாலமாக தான், மற்ற ஜாதிகளுக்காக அறிக்கைகள் விடுகிறார். அதனால் தான், இப்படிப்பட்ட, 'இமேஜ்' அவருக்கு! * என்.தேவி, சிவகாசி: ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழை மற்றும் அதனால் ஏற்படும் வெள்ளத்தால், மக்கள் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன?ஆட்சியாளர்கள் தங்கள் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவதில்லை என்பது ஒருபுறம் இருக்க, பொதுமக்களும், மட்காத குப்பையை கண்ட இடங்களில் கொட்டுவதையும், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பதையும் தவிர்க்க வேண்டியது தான், கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !