உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

ஆர்.வி.துர்கா தேவி, லாஸ்பேட், புதுச்சேரி: உங்களுக்கு ஆடை தேர்வு செய்வது நீங்களா அல்லது உங்கள் இல்லத்தரசியா?'இண்டியன் டெரைன்' ஷோரூமிலிருந்து, பிர்லா என்பவர், சட்டைகளை எடுத்து வருவார்; அதிலிருந்து தேர்வு செய்வேன்.'ரேமண்ட்' ஷோரூமிலிருந்து, கஜேந்திரன் என்பவர், பேன்ட்களை எடுத்து வருவார். உள்ளாடைகள், கைக்குட்டைகள் மற்றும் 'மேட்சிங்'கான காலுறைகளையும், அவரே எடுத்து வந்து விடுவார். ஆண்டுதோறும், ஜூன் 25ம் தேதி, 12 'செட்' வாங்கி விடுவேன்! எஸ்.பி.பரணீதரன், தேனி: நாம் ஆங்கிலம் கற்பது போல், மூன்றாவது மொழியாக, ஹிந்தி கற்பதில் தவறு இல்லையே...தவறே இல்லை. வட மாநிலங்களில் மேற்படிப்பு படிக்க, தொழில் செய்ய, ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும். இளம் தலைமுறையினரும், அதைத் தான் விரும்புகின்றனர்.'ஹிந்தி ஒழிக' என்று சொல்வதற்கு பதில், 'ஹிந்தி கற்கலாம்' என, நேர்மறையாக பயணித்தால், இன்னும் அதிக ஓட்டுகள் கிடைக்கும்!வி.ஜெயசீலி, நெசப்பாக்கம், சென்னை: 'அனைவரும் படிக்கும் பத்திரிகையாக, 'தினமலர்' நாளிதழ், கட்சி சார்பில்லாமல், இன்றும் இருந்து வருகிறது. இதேபோல், நாட்டின் மீது பற்று கொண்டவர்களாக, மற்ற பத்திரிகையாளர்களும் இருக்க வேண்டும்...' என, நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் சொல்வது சரி தானே...கவர்னர் இல.கணேசனுக்கு மிக்க நன்றி! அவர், 'தினமலர்' ஐ-பேப்பரை, தினமும் ஆழ்ந்து படிக்கிறார் போல் தெரிகிறது!* ஆ.ராஜேந்திரன், புளியகுளம், கோவை: 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாங்கிய நிலங்களை, ஏழைகளுக்கு வீடு கட்டக் கொடுக்கலாம்...' என, பெங்களூரு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளதே...மிக நல்ல பரிந்துரை; சம்பந்தப்பட்டவர்கள் செயல்படுத்தினால் நல்லது!* ந.மாலதி, துாத்துக்குடி: 'லஞ்சம், வாரிசு அரசியல் இல்லை எனில், தமிழகம் மேலும் வளரும்...' என, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேசி உள்ளாரே...கடந்த, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.,வுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தவர், இவர் தான்; அப்போது இந்த, 'லஞ்சம், வாரிசு' கான்செப்ட் எல்லாம், கண்ணுக்குத் தெரியவில்லை போலும்!ஜி.விஜயகுமார், கோவை: மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் போல அழகான நடிகர்கள், தமிழகத்திற்கு எப்போது கிடைப்பர்?ம்ஹும்... வாய்ப்பே இல்லை!நடிப்புத் துறைக்கு மட்டுமல்ல; அரசியல் துறைக்கும்!இ.கஸ்துாரி, தென்காசி: 'தினமலர்' இணைப்பு, 'வாரமலர்' இதழ், இப்படி இமாலய சாதனை படைக்கும் என, பத்திரிகை உலகம் முதலில் எண்ணி இருக்குமா?எண்ணியதால் தான் இவ்வளவு வளர்ச்சி!'தினமலர்' பங்குதாரர், மறைந்த, டாக்டர் வெங்கிடபதியின் யுக்தி தான் இது.அவர், ஜெர்மனியில், 'டாக்டரேட்' படித்து, அமெரிக்காவில் வேலை பார்த்தார். 'தினமலர்' நாளிதழுக்கு வந்த பின், 'வாரமலர்' ஆரம்பிக்க, 'ஐடியா' கொடுத்தார்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !