சைக்கிள் கார்!
சதீஷ் என்பவருக்கு, சிறு வயதிலிருந்தே கார் ஓட்ட வேண்டும் என்ற ஆசை. ஆனால், கூலி வேலை செய்யும் அவரால், ஓட்டுநர் உரிமம் பெறவோ, வாகனம் ஓட்டவோ முடியவில்லை. இருப்பினும், அவரது தீரா ஆசை நிறைவேற ஒரு வழி கண்டுபிடித்தார். கோட்டயம், சுங்கம் பிரேதேசத்தில் உள்ள காயலான் கடை ஒன்றில், பழைய மாருதி 800 காரின் ஸ்டியரிங்கை இலவசமாக வாங்கினார்; தன் சைக்கிளின் ஹாண்டில்பாரில் அதை பொருத்தினார். இப்போது, இந்த சைக்கிளில் போகும் சதீஷை, எல்லாரும் வியந்து பார்க்கின்றனர். — ஜோல்னாபையன்