எம்.ஜி.ஆருக்கு கார் ஓட்டியவர்...
எம்.ஜி.ஆரிடம் கார் ஓட்டுனராக பல ஆண்டுகள் பணியாற்றிய, வாசு என்பவர், இன்று ஆட்டோ ஓட்டி, வாழ்க்கை நடத்தி வருகிறார்.ஒருநாள், கேரள மாநிலம் மாஹிக்கு வந்த எம்.ஜி.ஆருக்கு, தற்காலிக ஓட்டுனர் ஆகும் அதிர்ஷ்டம், வாசுவுக்கு கிடைத்தது. அதன்பின், சினிமாவை விட்டு விலகி, முதல்வர் ஆனபோது, வாசுவின் ஓட்டுனர் பணியும் முடிவுக்கு வந்தது. அவர் வாழ்வாதாரத்துக்காக, நிறைய பணம் கொடுத்து அனுப்பி வைத்தார், எம்.ஜி.ஆர்.,சொந்த ஊரான கண்ணுாருக்கு சென்ற, வாசு, பேருந்து முதலாளி ஆனார். நான்கு பேருந்துகள், இரண்டு லாரிகள் என, கம்பீரமாக வாழ துவங்கினார். இதை தவிர, பார் ஒன்றையும் நடத்தி வந்தார். சில ஆண்டுகளில், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட, அனைத்தையும் இழந்தார். இப்போது, வருமானத்துக்காக ஆட்டோ ஓட்டி, வாழ்ந்து வருகிறார். இவரது ஆட்டோவில், எம்.ஜி.ஆர்., -ஜெயலலிதா பெயர்கள் எழுதப்பட்டு உள்ளன.— ஜோல்னாபையன்