பனிக்கால டிப்ஸ்!
குளிர்காலத்தில் இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை மற்றும் பசைத்தன்மை உள்ள உணவுகள் நல்லது. கோதுமை கஞ்சி மற்றும் ஆட்டுக்கால் சூப்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இது உடலுக்கு சூட்டைத் தரும். சுரைக்காய், பறங்கிக்காய் போன்ற நீர்க்காய்கள் பனிக்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை. பப்பாளி, அன்னாசி பழங்கள் சாப்பிடலாம். நாட்டுக்கோழி மற்றும் வெள்ளாட்டுக் கறி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.* கதகதப்பான உடைகளுடன் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வது, குளிர்கால தசை இறுக்கத்தை சீராக்கும். வெயில் படும்படியாக இருப்பது நல்லது. குளிர்காலங்களில் பச்சைத் தண்ணீரை தவிர்த்து, சுடு தண்ணீரில் குளிக்கலாம். உங்களின் உடைகள், விரிப்புகள் கதகதப்பாக இருக்கட்டும்* குளிரால், சளி உறைந்து போகும். தொண்டையைச் செருமித் துப்பினால் கூட சளி வராது. நல்லெண்ணெயில் மிளகு, சீரகம் பொரித்து வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். வெதுவெதுப்பாய் இருக்கும் எண்ணெயை, ஐந்தாறு சொட்டு மூக்கு வழியாக விட்டால், தொண்டை வழியாக இறங்கி சளியை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து வெளியேற்றும் * ஒரு லிட்டர் தண்ணீரில், கோரைக் கிழங்கு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) - 10 கிராம், சுக்கு - 5 கிராம் சேர்த்து, அரை லிட்டராக கொதிக்க வைத்து குடிக்க, மார்பில் சளி கட்டாது. துளசி தீர்த்தமும் பலன் தரும்* சுற்றிலும் பனியாய், வானம், மப்பும் மந்தாரமுமாய் இருந்தால், சாம்பிராணி புகை போட்டு, அந்தப் புகையில், போர்வையை காட்டுங்கள். அந்த துணியால் உடம்பைப் போர்த்த கதகதப்பு கூடும். இதுவும் பழங்காலத்தில் இருந்த ஒரு பழக்கம்.