இதப்படிங்க முதல்ல!
தனுஷின், 'மாஸான ஆக் ஷன்' படம்!ராஜ்கிரணை கதையின் நாயகனாக வைத்து, பா.பாண்டி என்ற படத்தை இயக்கிய, தனுஷ், அதையடுத்து, ராயன் படத்தை இயக்கி, நடித்தார். தற்போது, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்நிலையில், அடுத்தபடியாக மீண்டும் ஒரு படத்தை இயக்கி நடிப்பதற்கும், அவர் தயாராகி வருகிறார்.'நான்காவது முறையாக நான் இயக்கி நடிக்கும் படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, மூன்று மொழி ரசிகர்களையும் கவரக்கூடிய ஒரு, 'மாஸான ஆக் ஷன்' கதையில் உருவாகப் போகிறது. இப்படத்தில் பிரகாஷ்ராஜ், -நித்யாமேனன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க போகின்றனர்...' என்கிறார், தனுஷ்.சினிமாபொன்னையா 'ஹீரோ - வில்லன்' அவதாரம் எடுக்கும், ரஜினி!பதினான்கு ஆண்டுகளுக்கு முன், ஷங்கர் இயக்கிய, எந்திரன் படத்தில், 'ஹீரோ -- வில்லன்' என, இரண்டு வேடங்களில் நடித்தார், ரஜினிகாந்த். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும், கூலி படத்திலும், 'ஹீரோ - வில்லன்' ஆக நடிக்கிறார். இதில், வில்லன் கதாபாத்திரத்தில் இதுவரை, ரஜினியை எந்த படத்திலும் காட்டாத, ஒரு புதுமையான வில்லனாக வெளிப்படுத்தி இருக்கும், லோகேஷ் கனகராஜ், 'இதற்கு பின், ரஜினியின் இந்த வில்லன் வேடம், பல நடிகர்களுக்கு,'ரோல் மாடல்' ஆக இருக்கும்...' என்கிறார். — சி.பொ.,தமிழில், 'பிசி'யாகும், மஞ்சு வாரியர்!தனுஷ் நடித்த, அசுரன் படம் மூலம், தமிழுக்கு வந்த மலையாள நடிகை, மஞ்சு வாரியர், அதையடுத்து, துணிவு படத்தில், அஜித்துடன் நடித்தார். தற்போது, ரஜினியின், வேட்டையன், விஜய் சேதுபதியின், விடுதலை- 2 என, பல படங்களில் நடித்து வருகிறார்.'படம் முழுக்க வரும் கதாபாத்திரங்களை விட, நான்கு, 'சீன்'களில் வந்தாலும், அழுத்தமான நடிப்பை பதிவு செய்யும் கதாபாத்திரங்களாக இருந்தாலும், நடிக்க தயார்...' என்கிறார், மஞ்சு வாரியர்.— எலீசாத்ரிஷாவின், வைர நகை கலெக் ஷன்!நடிகை த்ரிஷாவுக்கு, வைர நகைகள் என்றால் கொள்ளை பிரியம். அதன் காரணமாகவே, அவரது பிறந்த நாளில், நண்பர்கள் மற்றும் தோழிகள், அவருக்கு, வைர மோதிரம், வைர நெக்லஸ் என்றே பரிசளிக்கின்றனர். அதோடு, த்ரிஷாவும் விதவிதமான வைர நகைகளை சேமித்து வைத்திருக்கிறார். எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், அனைவரையும் கவர்ந்து இழுக்கக்கூடிய, வைர நகைகளை அணிந்து வருவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.எலீசா'வெப்' தொடர் பக்கம் திரும்பிய, சமந்தா!குஷி படத்திற்கு பின் எதிர்பார்த்தபடி, சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. அதன் காரணமாக, ஏற்கனவே, தி பேமிலி மேன் என்ற ஹிந்தி, 'வெப்' தொடரில் நடித்த, சமந்தா, தற்போது, சிட்டாடல் என்ற இன்னொரு, 'வெப்' தொடரில் நடித்து வருகிறார். இதையடுத்து, பாலிவுட் நடிகர் ஆதித்ய ராய் கபூருக்கு ஜோடியாகவும், மீண்டும் ஒரு ஹிந்தி, 'வெப்' தொடரில் நடிக்கப் போகிறார்.சினிமாபொன்னையாகறுப்புப் பூனை!சுள்ளான் மற்றும் மெரினா நடிகர்களுக்கு இடையே, கருத்து மோதல் ஏற்பட்டு, அது தொழில் போட்டியாகவும் மாறியது. இந்நிலையில், சமீபத்தில், சுள்ளான் நடிகர் நடிப்பதற்கு பேச்சு நடத்தி வந்த ஒரு படத்தை, குறுக்கே புகுந்து தட்டிப் பறித்து விட்டார், மெரினா நடிகர். இதன் காரணமாக, ஏற்கனவே அவர்கள் இருவருக்கும் இடையே இருந்து வந்த பகை, தற்போது, மேலும் பெரிய அளவில் கொழுந்துவிட்டு எரிய துவங்கி இருக்கிறது.சினி துளிகள்!* பகத் பாசில் நாயகனாக நடிக்கும் படத்தில், வில்லனாக நடித்து, மலையாளத்தில் அறிமுகமாகிறார், நடிகர் எஸ்.ஜே.சூர்யா.* பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் படங்களைத் தொடர்ந்து, மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கப்போகும், ராஜமவுலி, அதையடுத்து, 2000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரதத்தை, நான்கு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுஉள்ளார்.* கடந்த, 2017ல், கவுதம் கார்த்திக் நடிப்பில் தான் இயக்கிய, இவன் தந்திரன் என்ற படத்தின் இரண்டாம் பாகத்தை, மீண்டும் அவரை வைத்தே இயக்குகிறார், ஆர்.கண்ணன்.* சிவகார்த்திகேயன் நடிக்கும், 24வது படத்தை, ஏற்கனவே தான் இயக்கிய, துப்பாக்கி பட ரேஞ்சுக்கு, 'ஆக்ஷன்' படமாக இயக்கி வருகிறார், ஏ.ஆர்.முருகதாஸ்.அவ்ளோதான்!