உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ரஜினிகாந்த்!சமீபகாலமாக, முன் வரிசையில் இருக்கும் இளவட்ட, 'ஹீரோ'களின் படங்களே உடனடியாக வியாபாரம் ஆகாமல் தடுமாறி வருகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும், கூலி படமோ, படப்பிடிப்பு முடியும் முன்பே, ஏரியாக்கள் மட்டுமின்றி, டிஜிட்டல் உரிமையும் விற்பனை ஆகிவிட்டது.மார்க்கெட்டில், ரஜினி படங்களுக்கு இருக்கும் இந்த வரவேற்பை பார்த்து, அடுத்தபடியாக விஜய், அஜீத்துக்கான, 'ஸ்கிரிப்டு'களை வைத்துள்ள இயக்குனர்களும், ரஜினியை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.— சினிமா பொன்னையாதமிழில், 'டப்பிங்' பேசும், பூஜா ஹெக்டே!தமிழில், முகமூடி மற்றும் பீஸ்ட் போன்ற படங்களில் நடித்தார், பாலிவுட் நடிகை, பூஜா ஹெக்டே. தற்போது, விஜயுடன், ஜனநாயகன், சூர்யாவுடன், ரெட்ரோ மற்றும் லாரன்ஸ் உடன், காஞ்சனா - 4 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.தற்போது, ரெட்ரோ படத்திலிருந்து அவர், தமிழில், 'டப்பிங்' பேச, துவங்கி இருக்கிறார். தமிழில் நீண்ட காலமாக நடித்து வரும், காஜல் அகர்வால், தமன்னா போன்ற மும்பை நடிகைகளே இதுவரை தமிழில், 'டப்பிங்' பேச முயற்சிக்கவில்லை.இந்நிலையில், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள பூஜா ஹெக்டே, தனக்கு தானே, 'டப்பிங்' பேசுவது, கோலிவுட்டில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.— எலீசாமுதிர்ச்சியான, 'சென்டிமென்ட்' வேடத்தில், விஜய் சேதுபதி - த்ரிஷா!ஏற்கனவே, 96 என்ற படத்தில், விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் காதலர்களாக நடித்தனர். அந்த படம், 'சூப்பர் ஹிட்' ஆன நிலையில், தற்போது மீண்டும் அப்படத்தின், இரண்டாம் பாகத்திலும் நடிக்கப் போகின்றனர்.இந்த இரண்டாம் பாகம், 'சென்டிமென்ட்' கதையில் உருவாகப் போகிறது. அதோடு, விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் இப்படத்தில், நரை முடியுடன், வயதான, 'கெட்-அப்'பில் நடிக்கப் போகின்றனர்.— சி.பொ.,மீண்டும் பழைய, 'ரூட்'டுக்கே திரும்பிய, விஜய் ஆண்டனி!இசையமைப்பாளராக சினிமாவில், 'என்ட்ரி' கொடுத்தவர், விஜய் ஆண்டனி. ஒரு கட்டத்தில், தயாரிப்பாளர், 'ஹீரோ' மற்றும் 'எடிட்டர்' என, பல அவதாரம் எடுத்தவர், அதன் பின், நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார்.ஆனால், அவர் நடித்த படங்கள் வெற்றியை கொடுக்காமல் தொடர்ந்து, 'பிளாப்' ஆகி வந்ததால், தற்போது மீண்டும், தான் நடிக்கும் படங்களை தயாரிப்பது மற்றும் இசையமைப்பது என, பழைய, 'ரூட்'டுக்கே திரும்பி இருக்கிறார், விஜய் ஆண்டனி.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை...காதல் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்றுவிட்ட, பாணா காத்தாடி நடிகைக்கு, அவ்வப்போது சில சினிமா புள்ளிகள், 'ஐ லவ் யூ மெசேஜ்' அனுப்பி, 'ப்ரபோஸ்' செய்வதுடன், போன் செய்தும், 'டார்ச்சர்' கொடுத்து வருகின்றனர்.இதுபோன்ற நபர்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, சமீபத்தில், 'மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமலேயே நான், தனித்தே வாழ்ந்து காட்டப் போகிறேன்...' என, ஒரு பேட்டி கொடுத்தார், அம்மணி. இருப்பினும், அந்த ரோமியோக்கள் அவரை விடாமல் துரத்திக் கொண்டிருக்கின்றனர்.இதையடுத்து, சினிமா வட்டாரங்களில் கொடுத்திருந்த தன் மொபைல் நம்பரை மாற்றி, தற்போதைய புதிய நம்பரை ரகசியமாக வைத்திருக்கிறார், பாணா காத்தாடி நடிகை. சினி துளிகள்!* ஏற்கனவே தன்னை வைத்து, ஓ பேபி என்ற படத்தை இயக்கிய நந்தினி ரெட்டியின் இயக்கத்தில், மீண்டும் ஒரு படத்தில் கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார், சமந்தா.* சுந்தர்.சி. இயக்கும், மூக்குத்தி அம்மன் - 2 படத்தில் நடிக்க, பாதி சம்பளம் மட்டுமே வாங்கியுள்ள, நயன்தாரா, மீதியை, படத்தின் லாபத்தில் பங்கு கேட்டுள்ளார்.* ஆரம்ப காலத்தில் அதிரடி போலீசாக சில படங்களில் நடித்துள்ளார், விஜயசாந்தி. நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது, தெலுங்கில் தயாராகி வரும், அர்ஜூன் சன் ஆப் வைஜெயந்தி படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !