உள்ளூர் செய்திகள்

சுற்றுலா செல்லும் முதியோர்களுக்கு...

கோடையில் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போது, வீட்டில் உள்ள முதியவர்களை தனிமையில் விடாமல், அவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும். அப்படி அழைத்து செல்லும் போது, அவர்களின் பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...* காரில் செல்வதைத் தவிர்த்து, ரயிலில் பயணம் செய்யுங்கள். அதுவே அவர்களுக்கு பாதுகாப்பானது. நீங்கள் செல்லக் கூடிய ஊரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களை, 'லிஸ்ட்' எடுத்துக் கொள்ளுங்கள். அதில், எந்த இடத்துக்குச் செல்லலாம் என்பது போன்ற தகவல்களை குறித்து வைத்து, அதற்கான நேரத்தையும் ஒதுக்கி, உங்கள் வசதிக்கேற்ப முதியோர்களை அழைத்துச் செல்லுங்கள் * மலை வாசஸ்தலங்களுக்கு செல்வதைத் தவிர்க்கலாம். எந்த மாதிரியான சீதோஷ்ண நிலை, அவர்களின் உடல் நலத்துக்கு ஆகாது என்பதை அறிந்து, அந்த இடங்களைத் தவிர்த்து விடுங்கள்* முதியோரில் பலர், தொடர்ந்து மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வர். அவற்றை மறக்காமல் பயணத்தின் போது எடுத்துச் செல்லுங்கள். குடும்ப மருத்துவரின் தொடர்பு எண்ணை வைத்திருங்கள். இது, அவசர காலத்தில் ஆலோசனை கேட்க உதவும்.* வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில், அதிக வெளிச்சத்தால் வயதானவர்களின் கண்கள் கூசும். பழக்கப்படாத இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லும் போதும், படிகளில் ஏறி இறங்கும் போதும் கூடுதல் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !