உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: அறிவின் திறவுகோல்!

* எட்டாக்கனியையும்எட்டிப்பறிக்க வைத்திருப்பாரே...ஏழ்மை நிலையைதவிடு பொடியாக்க வைக்கும்வித்தையை கற்றுகொடுத்திருப்பாரே!* தேசத் தலைவர்களையும்விரல் பிடித்துவழி நடத்திச் சென்றிருப்பாரே...தேசம் என்ற உணர்வையும்தன் விரல் கொண்டு பிசைந்துஊட்டியிருப்பாரே!* அமிர்தமெது நஞ்செதெனபிரித்தறியச் செய்திருப்பாரே...அன்னையும் பிதாவும்முன்னறி தெய்வமெனஅனைவரின் உணர்விலும்ஏற்றியிருந்திருப்பாரே!* உலகம் உருண்டை என்றெனஉணர வைத்திருப்பாரே...ஒன்றே குலமெனவும்ஒருவனே தேவனெனவும்காதுகளில் ஓதியிருப்பாரே!* முயற்சி தன் மெய்வருத்தகூலி தருமெனமுயல வைத்திருப்பாரே...நம்பிக்கை சிறகுகளைதோள்களில் கட்டி வானில்ஏற்றி விட்டிருப்பாரே!* தூணிலும் இருப்பான் கடவுளெனதெளிவூட்டி இருப்பாரே...பிச்சைப் புகினும் கற்கை நன்றெனஎடுத்துரைத்திருப்பாரே!* எழுத்து அறிவித்தவன் இறைவன்என்ற பட்டத்தை தாங்கியும்தலைக்கனமில்லாமல்தரணியில் வலம் வந்துகொண்டிருக்கும் ஆசிரியர் அவரே!- மு.கவுந்தி. சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !