உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - புதிய கதவுகள்!

நீஒரே பாதையில் நடந்து, உனக்குசலிப்பேற்பட்டால்உடனே, உன் பாதையை மாற்றி விடு...அப்போது தான் லட்சிய பயணம்இனிமையாகும்!நீஒரே கதவை தட்டிக் கொண்டிருந்தால்எந்தப் பலனுமில்லை...வேறொரு கதவையும் தட்டுஅப்போது தான் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்!உனக்குபழைய நண்பர்கள் துரோகம் இழைத்தால்மலர் போல் வாடி விடாதே...புதிய நண்பர்களை கவனமாக தேடுநல்ல நண்பர்கள் கிடைத்தால்இறுதி வரை அவர்களுடன் இணைந்திடு!உன் காதலி, உன்னை விட்டு விலகினால்தேவதாஸ் போல் தாடி வளர்த்துசோக கீதம் பாடாதே...உன்னை புரிந்து கொண்டவளைமணமுடித்துக் கொள்!உன் வேலையை விட்டு உன்னை துாக்கி எறிந்தால், கண்கள் கலங்காதேதன்னம்பிக்கையுடன் தேடுதல் வேட்டையை துவங்குபரந்த இந்த உலகில் நிச்சயம் உனக்குவேலை கிடைக்கும்!இந்த வாழ்க்கை இல்லாவிட்டால்இன்னொரு வாழ்க்கை உனக்கு இல்லைஆனால், ஒரு வாய்ப்பு இல்லாவிட்டால்இன்னொரு வாய்ப்பு உனக்கு உண்டு!வானத்தில் பறக்கும் பறவைகள்ஒரு மரம் இல்லாவிட்டால்இன்னொரு மரத்தை நாடுவது போலஉனக்கு ஒரு வாய்ப்பு தோல்வியானால்இன்னொரு வாய்ப்புக் கதவுகள் திறந்திருக்கும்!— எம்.பாலகிருஷ்ணன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !