உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - பாரதி புகழ் ஓங்குக!

செப்., 11 - பாரதியார் நினைவு தினம்!* முண்டாசு கவிஞனேஉன் மூளையிலிருந்து வெளிப்பட்டஒவ்வொரு கருத்தும் எங்கள் நாடி நரம்புகளில் புரட்சி உணர்ச்சிகளை பெருக்கெடுத்து ஓட வைத்தது! * பாட்டுக்கொரு புலவனேநீ வார்த்தைகளாய் உதிர்த்த ஒவ்வொரு கட்டளையும்நாட்டின் நலன் சார்ந்தல்லவாமக்கள் மனங்களில் எல்லாம்தீயை மூட்டியது! * மகத்தான மகாகவியே உன் பார்வைகள் உமிழ்ந்திட்ட அக்கினிப் பிழம்பு தானே அந்நியரை அச்சமூட்டி விடுதலைப் போருக்கு புறப்படவீரர்களைத் துாண்டியது! * கோபக்கார காளிதாசனே நீ வரிகளாய் வார்த்தெடுத்த படைப்புகள் அத்தனையிலும் சுயநலத்தை துறந்து பொதுநலத்தை மட்டுமல்லவாநிரப்பி வைத்தாய்! * பைந்தமிழ் தேர்ப்பாகனே எட்டயபுரத்தில் போர்க்குரல் எழுப்பி தேசத்தின் எட்டு திக்கிலும்அடிமை உணர்வை அகற்றித்தானேசுதந்திர வேட்கையோடு அஞ்சாமல் கொடி பிடிக்க செய்தாய்! * செல்லம்மாளின் மணாளனே தமிழ்த்தாயின் புதல்வனென பெருமிதமாய் தலைநிமிர்ந்து பாரதத்தின் காவலனாக வாழ்ந்து இறவா புகழுடம்பு எய்திய துாயவனேஉன் புகழ் ஓங்குக! பொ.தினேஷ்குமார், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !