கவிதைச்சோலை - வரம்!
* மறதியே வா...என்னை உன் வசமாக்கிக் கொள்...உன் அரவணைப்பில் தான்நிம்மதி கிடைக்குமென்றால்உன்னை நான் விடப்போவதில்லை!* அறியா வயதில்தெரிந்தும் தெரியாமலும்செய்த தவறுகளை என்னிடமிருந்து மறக்க செய்ததால்குற்ற உணர்ச்சி இல்லாமல்வாழ முடிகிறது!* பருவ வயதில்எனக்கு ஏற்பட்டபுறக்கணிப்புகள்ஏமாற்றங்கள்மறதியால் மூழ்கடிக்கப்பட்டதும்வாழ்க்கை பிடிப்பட்டது!* கல்லுாரி நாட்களில்நண்பர்களுடன் ஏற்பட்டவார்த்தை சண்டைகளும், மோதல்களும்மறக்கடிக்கப்பட்டதால்இனிய நட்பை தொடர முடிகிறது!* குடும்ப வாழ்க்கையில்உறவுகளுக்குள் ஏற்பட்டநெருடல்கள் மனக் கசப்புகள்மறதி எனும் வரத்தால்இன்றும் இனிதாக உறவாட முடிகிறது!* வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்செய்த தவறுகளும்மன உளைச்சல்களும்மறதியால் மறந்து போனதால்தெளிவான மனதுடன்அனைவருடனும் அளவளாவ முடிகிறது!* மீதமுள்ள வாழ்நாளையும்பக்குவப்பட்ட மனதுடன் வாழஉறவுகளுடனும், நட்பு வட்டத்துடனும்இனிமையாக பயணிக்க மறதியே வா!* மறதி நோயல்ல - அது இனிய வரம்!செல்வி நடேசன், சென்னை.