உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: அழுது துடிக்கும் மரம்!

அதிதியாய் வந்த பறவைக்குஅடைக்கலம் கொடுத்தது மரம்அழகாய் கூடமைத்துக்கொள்ளகொஞ்சம் குச்சிகளையும் தந்தது!வெயிலில் இளைப்பாறிக் கொள்ளதன கிளைக் கரங்களால்தண் குடைப்பிடித்தது!முட்டைகள் இடுவதற்குமென் நரம்புகள் பின்னலிட்டசருகுகளை தந்தது!பொந்துகள் கொத்திகதகதப்பாய் வாழ்ந்து கொள்ளதன் தேகத்தையே கொடுத்தது!குஞ்சுகள் பொரித்து,கீச் குரல் கேட்டதும்பஞ்சு உடையாய் பூக்களையும்பரிசாய் கனிகளையும் ஈந்தது!அடை மழைக்கும்ஆகாயத்தை அசைக்கும் காற்றுக்கும்அரணாய் காத்து நின்றது!இறக்கை முளைத்த குஞ்சுகளுடன்தாய்ப் பறவைதிசை மாறிப் பறந்ததும்...பிரிவாற்றாமையால்அழுது துடித்தது மரம்பிள்ளைகளால் நிராகரிக்கப்பட்டபெற்றோரைப் போல!- இ.எஸ். லலிதாமதி, சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !