உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: களம் காண்போம் வா!

முகநுாலில் மூழ்கியது போதும்முகவரியை உறுதியாக்குகாலம் நமக்காக காத்திருக்காதுகளம் காண்போம் வா!கஞ்சாநெஞ்சர்கள் கலைந்து போகட்டும்அஞ்சா நெஞ்சர்கள் அணிவகுக்கட்டும்போதை என்பது ஒருவழிப் பாதைபோனவர் திரும்பாத புதைக்குழி பாதை!ஐயாயிரம் பேர்உன்னை பின் தொடர்வது அருமை தான்அதில் அடுத்த வீட்டுக்காரனையும் சேர்த்துக் கொள்அது தான் உனக்குப் பெருமை!சாலையில் விபத்தென்றால்முதலுதவியைக் கையிலெடுமொபைல் போனை பையிலிடுமுடிந்தவரை உதவிக்கு தோள் கொடு!பெண்களின் அங்கங்களை அளவெடுப்பதை நிறுத்துஉறுப்புகளில் தான் மாற்றம்உணர்வுகளில் அவர்களும் மனிதர்களே என்பதை உணர்ந்துபெண்மையை மதித்து போற்று!நலம் விசாரிநட்பு பாராட்டுஅன்பு செலுத்துஅக்கறை காட்டுசோஷியல் மீடியாவில் மட்டுமல்லசொந்த பந்தங்களுக்கிடையிலும்!எதுவும் செய்யாதிருந்தாலும்பரவாயில்லை'எதையாவது' செய்துவிடாதேஉனக்கும் பின்னேஓராயிரம் மந்தை ஆடுகள்வழி மாற வேண்டாம்!பெற்றவர்களோடு பெரியோரை வணங்குகுருத்துமட்டை தான் நாளைபழுத்த மட்டையாகிறது இது புரிந்தால் வாழ்க்கை வசந்தமாகும்!முகநுாலில் மூழ்கியது போதும்முகவரியை உறுதியாக்குகாலம் நமக்காக காத்திருக்காதுகளம் காண்போம் வா!- ப.ராஜகோபால், மன்னார்குடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !