கவிதைச்சோலை: மனிதநேயம் மகத்தானது!
விழுந்தவனுக்கும் விழுந்தடித்துஎழுந்தவனுக்கும் தான் தெரியும்முன்னேறும் பாதைகரடு முரடானது என்று!உழைப்பவனுக்கும்உழைத்து களைத்தவனுக்கும் தான் தெரியும்வியர்வைத் துளிகள் மதிப்பு மிக்க மாணிக்க கற்கள் என்று! கொடுப்பவனுக்கும்கொடுத்து கொடுத்துகரம் சிவந்தவனுக்கும் தான் தெரியும்தர்மம் உலகத்தில் உயர்ந்தது என்று!சிந்திப்பவனுக்கும்சிந்தனைக்கு செயல்வடிவம்கொடுப்பவனுக்கும் தான் தெரியும்சாதிக்கும் வழிமுறைகள் சிக்கலானவை என்று! வாழ்ந்தவனுக்கும்வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கும் தான் தெரியும்வாழ்க்கை ஒரு போராட்ட களம் என்று! கசப்புகளை மறப்பவனுக்கும்தவறுகளை மன்னிப்பவனுக்கும் தான் தெரியும்மானிட பிறவியில் மனித நேயம் மகத்தானது என்று!- எல்.மூர்த்தி, கோவை. தொடர்புக்கு: 77087 71321