உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: புரிந்தால்தான் வாழ்க்கை

செதுக்கினால் தான் சிற்பம் இல்லையெனில் எல்லாமும் கற்கள் தான்! விதைத்தால் தான் பயிர் இல்லையெனில் எல்லாமும் வீண் தான்! மீட்டினால் தான் இசை இல்லையெனில் எல்லாமும் துருப்பிடிக்கப் போகும் நரம்புகள் தான்! உழைத்தால் தான் உயர்வு இல்லையெனில் எல்லாரும் சோம்பேறி தான்! படித்தால் தான் பகுத்தறிவு இல்லையெனில் எல்லாரும் மூடர்கள் தான்! ஏற்றினால் தான் தீபம் இல்லையெனில் எங்கேயும் இருள் தான்! துடித்தால் தான் இதயம் இல்லையெனில் எல்லாரும் மரணம் தான்! வரைந்தால் தான் ஓவியம் இல்லையெனில் எல்லாமும் கிறுக்கல்கள் தான்! முயன்றால் தான் வெற்றி இல்லையெனில் எல்லாமும் தோல்வி தான்! தடைகள் தாண்டினால் தான் சாதனை இல்லையெனில் எல்லாமும் சோதனை தான்! புறப்பட்டால் தான் பயணம் இல்லையெனில் எல்லாமும் புழுதிக் காடு தான்! இவையெல்லாம் புரிந்தால் தான் வாழ்க்கை புரிந்துகொள் என் தோழா... புலம்பி திரிவதை மறந்து விடு என் தோழா! - பெ.பாண்டியன், காரைக்குடி. தொடர்புக்கு : 9942847919


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !