நடந்தது என்ன?
ஜூலை, 14, 1880 - பிரான்ஸ் நாடு, தன்னுடைய தேசிய தினத்தை அறிவித்து கொண்டாடியது. * 1889 - கார்ல் மார்க்ஸ் அறிவித்த, 8 மணி நேர வேலை திட்டம், தீர்மானமாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. * 1942 - காங்கிரஸ் வார்தா மாநாட்டின் போது, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் நடத்த தீர்மானம் கொண்டு வந்ததுடன், அதை, காந்திஜி முன்னின்று வழி நடத்துவார் எனவும் அறிவித்தது. * 1945 - ஹெச்.சி.எல்., நிறுவனர், சிவ் நாடார் பிறந்த நாள்.* 1976 - கனடாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. * 2015 - இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இறந்த நாள். * 2015 - ப்ளூடோ கிரகத்தை ஆராய, நாசா நிறுவனம் ஒரு விண்வெளி கப்பலை அனுப்பியது. மிக நீண்ட தொலைவில் உள்ள ஒரு பொருளை ஆராய அனுப்பப்பட்ட பயணம் இதுதான். சிறப்பு தினம்: சிம்பன்சி குரங்கு தினம்.