உள்ளூர் செய்திகள்

நடந்தது என்ன?

செப்டம்பர், 1, 1604 - சீக்கிய புனித நுால் குரு கிரந்த சாஹிப். அதாவது, ஆதி கிரந்தம், அமிர்தசரஸ் பொற்கோவிலில் வைக்கப்பட்டது. * 1875 - டார்ஜானை உருவாக்கிய, அமெரிக்க நாவலாசிரியர் எட்கர் ரைஸ் பர்ரோஸ் பிறந்த நாள். *  1895 - கர்நாடக இசை பாடகர் செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த நாள். *  1896 - உலக கிருஷ்ண பக்தி கழகத்தை நிறுவிய, சுவாமி பிரபு பாதா பிறந்த நாள். *   1939 - நாஜி ஜெர்மனி, போலந்தை ஆக்கிரமித்ததும், இரண்டாம் உலகப் போர் துவங்கியது. *  1942 - இந்திய தேசிய ராணுவம், சுபாஷ் சந்திரபோசால், இந்திய தேசிய லீக் சார்பாக ஏற்படுத்தப்பட்டது. *  1947 - ஐ.எஸ்.டி., - இந்திய ஸ்டாண்டர்ட் டைம் அறிமுகம். க்ரீன்விச் மீன் டைமை விட, 5:30 மணி நேரம் முன்னால் துவங்கும். *  1956 - எல்.ஐ.சி., ஆயுள் காப்பீட்டு நிறுவனம் துவக்கப்பட்டது. *  1991 - உஸ்பெகிஸ்தான், சோவியத் யூனியலிருந்து பிரிந்து, தனி நாடானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !