ரிலாக்ஸ் கார்னர்!
காலதாமதமாக வருவது என்பது எல்லாருக்கும் பழகிவிட்ட ஒன்றாக உள்ளது. அதிலும், பள்ளியில் படிக்கும் மாணவர்களை பற்றி சொல்லவே வேண்டாம். 'ஏன்டா, லேட்?' என்று கேட்டால், 'நேரமாயிடுச்சி சார்..' என்பான்.'ஏன்டா இவ்வளவு தாமதமாக வருகிறாய்?' என்று, தாமதமாக வந்த மாணவனைப் பார்த்து கேட்டார், ஆசிரியர்.'ஐயா, வரும் வழியில் வைத்துள்ள வழிகாட்டி பலகையின் வாசகத்தால் தான் தாமதமாக வந்தேன்...' என்றான். 'என்னடா சொல்ற. ஒண்ணும் புரியலையே...' என்றார், ஆசிரியர். 'அருகில் பள்ளி இருக்கிறது. மெதுவாக போகவும் என்று அதில் எழுதியிருந்தது, ஐயா...' என்றான், மாணவன். - புலவர் மா.ராமலிங்கம்