ரிலாக்ஸ் கார்னர்
வீட்டில், 'டிவி' சீரியலை, இரவு மங்கிய ஒளி வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டிருந்தார், அம்மா.சீரியல் முடிந்ததும், 'என்ன வாயெல்லாம் கசக்குது. டேய், சுந்தர் இங்க வாடா. எந்தக் கடையிலடா முறுக்கு வாங்கினே. ஒரே கசப்பா கசக்குது...' என்றாள்.'இல்லையேம்மா. நான் சாப்பிட்டேனே நல்லாத்தான் இருந்தது...' என்றான், மகன். 'எனக்கு மட்டும் ஏன் கசக்குது...' என்றபடி பார்த்த அம்மாவுக்கு அப்போது தான் புரிந்தது. கொண்டு வந்த முறுக்கு அப்படியே இருக்க, கொசுவர்த்திச் சுருளைத் தின்று தீர்த்தது.— புலவர் மா.ராமலிங்கம்