உள்ளூர் செய்திகள்

சமையல் டிப்ஸ்!

எந்த வகை சுண்டல் செய்தாலும், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்துக் கலந்து கிளறி இறக்கினால், சுவையாக இருக்கும்; உடலுக்கும் நல்லது * ஊறுகாய் செய்யும்போது உப்பை லேசாக வறுத்துப் போட்டால், ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது * தோசை ஊற்றுவதற்கு முன், தோசைக்கல்லில் எண்ணெய் தேய்ப்பதற்கு பதிலாக தண்ணீர் தெளித்து துடைத்து, மாவை ஊற்றினால் தோசை மொறுமொறுப்பாக வரும் * எந்த வகை சூப்பாக இருந்தாலும், அதில் அரை தேக்கரண்டி இஞ்சிச் சாறு சேர்த்தால், சூப் சுவையாக இருக்கும் * காலையில் செய்த சாம்பாரை இரவில் உபயோகப்படுத்த சிறிது வெந்தயம், தனியாவை வறுத்துப் பொடித்து அதனுடன், ஒரு தேக்கரண்டி சீரகத்தை சேர்த்து அரைத்து விட சாம்பார் மணக்கும் * கேரட் பாயசம் செய்து இறக்கிய பின் அத்துடன் பாதாம், 'எசன்ஸ்' சேர்த்தால், அசல் பாதாம் கீர் போல இருக்கும். சமையலில் செய்யக்கூடாதவை: * காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கக்கூடாது * ரசம் அதிகம் கொதிக்கக்கூடாது * கீரைகளை மூடி போட்டு சமைக்க கூடாது * உணவு சூடாக இருக்கும் போது அதில் எலுமிச்சம் பழம் பிழியக் கூடாது * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !