உள்ளூர் செய்திகள்

கோடைக்கால டிப்ஸ்!

சூரியன் உச்சியில் வரும் சமயம் வெளியே தலை காட்டாதீர். நிறைய தண்ணீர் பருகுங்கள். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். * தர்ப்பூசணி, பப்பாளி, கிர்ணி, வாழைப்பழம் எல்லாம் உங்கள் உடல் சூட்டைக் குறைக்கும். கோடைக்கால நோய்கள் பலவும் நீரின் வழி பரவும். அதனால், கொதிக்க வைத்து ஆறவிட்டுக் குடியுங்கள். எலுமிச்சம் பழ ஜூஸ் மிகவும் நல்லது * ஐஸ்க்ரீம் மற்றும் குச்சி ஐஸ் ஆகியவற்றை தவிருங்கள். இது, மஞ்சள் காமாலைக்கும், காலராவுக்கும் கதவைத் திறந்து விடும். * காய்கறிகளை நன்றாக வேகவைத்து உண்ணவும். கோடைக் காலத்தில் உணவு சீக்கிரம் கெட்டுவிடும். அதனால், சமைத்த உடனே சாப்பிடுவது சிறந்தது * தெரு ஓர கடையில் விற்கப்படும் உணவு நாக்கில் நீர் ஊறவைக்கும் தான். அதிலும் சாட், ஜூஸ் வகைகள் சப்புக் கொட்ட வைக்கும். 'பாஸ்ட் புட்' விற்கிற இடம் பக்கமே திரும்பாதீர்கள் * 'சன் ஸ்ட்ரோக்' என்பது பலரையும் பாதிக்கும் பிரச்னை. குடை, தொப்பி போன்றவை இல்லாமல் வெயிலில் செல்லவே கூடாது * அதிக சூடு பாதிப்பு ஏற்பட்டால் பயங்கரமாக வியர்த்துக் கொட்டும். பலவீனமாக இருக்கும். சருமம் நிறமிழக்கும். நாடித்துடிப்பு கூட பலமிழந்து போகலாம். வாந்தி- மயக்கம் வரும். இந்த பாதிப்புகள் தென்பட்டதும், குளிர்ச்சியான இடத்தில் சற்று ஓய்வெடுக்கலாம். நிறையத் தண்ணீர் குடிக்கலாம் * கோடை காலத்தில், சரும நோய்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. கண் பாதுகாப்பு தேவை. சில நோய்த் தொற்றுக் கிருமிகள் காரணமாக மூச்சுப் பிரச்னை, சளித்தொல்லை, இருமல், வயிற்றுப் போக்கு, வாந்தி வரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rajasekaran Sangeetha
ஏப் 05, 2026 10:18

எங்கள் குடும்பம் தினமலரின் 25 வருட வாசகக்குடும்பம். ஞாயிற்றுக்கிழமை வந்தால் நான் காலை நடைப்பயிற்சி போகும்போதே பூங்காவில் அமர்ந்து வாரமலர் முழுவதையும் படித்துவிட்டே வீட்டிற்கு செல்வது வழக்கம். காரணம் வீட்டில் வாரமலருக்கு போட்டி அதிகம். அதில் வரும் பயனுள்ள தகவல்களை வாட்ஸ்அப் மூலம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளேன்.