உள்ளூர் செய்திகள்

சுயம்பு மூர்த்தி!

ஸ்ரீ ராமபிரான் தலைமையில், 4,000 முனிவர்கள், அசுவ மேத யாகம் செய்தனர். விநாயகரை வழிபட மறந்ததால், முனிவர்களுக்கு மந்திரம் மறந்து, யாகம் தடைபட்டது.நாரதர் வாக்குப்படி விநாயகரை வழிபட்டு, யாகம் பூர்த்தி ஆனது; விநாயகரும் யாகத்தில் கலந்து கொண்டார். அவரே நாலாயிரத்தொரு விநாயகர்; சீர்காழி அருகே உள்ள திருமணிக்கூடம் வைணவ திருப்பதியில் உள்ள சுயம்பு மூர்த்தி. அபிஷேகம் செய்யும் நீர், சிகையின் உள்ளே சென்று விடுமாம்.*** * சென்னை - வேடந்தாங்கல் இடையே, மூசிவாக்கம் அருகே, அம்ருதபுரி எனப்படும் ராமானுஜ யோக வனம் உள்ளது. இங்கு நவகிரக விநாயகர் உள்ளார். 8 அடி உயரத்தில் ஒரே கல்லில், உடலமைப்பில் நவக்கிரகங்களை தாங்கியுள்ளார். நவகிரகங்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப் பட்டோர், இந்த விநாயகரை வணங்கினால் துன்பம் நீங்கும்.**** காஞ்சியில், காமாட்சி அம்மன் கோவில் அமைந்திருக்கும் தெரு கோடியில் உள்ள விநாயகரின் பெயர், ஏலேலோ விநாயகர். காமாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரத்தை எழுப்பும் முன், இவரை வழிபட்டு, ஏலேலோ ஏலேலோ என்றவாறு, சாரத்தின் மீது கோபுர உச்சிக்கு கற்களை இழுத்துச் சென்றதால், இப்பெயர் சூட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !