உள்ளூர் செய்திகள்

நடந்தது என்ன?

ஜன., 28, 1813ல், பிரபல பெண் எழுத்தாளர், ஜேன் ஆஸ்டின், தன்னுடைய மிக பிரபலமான, 'பிரைட் அண்டு பிரிஜுடிஸ்' நுாலை வெளியிட்டார். ஜன., 28, 1865ல், லாலா லஜபத்ராய் பிறந்தநாள். ஜன., 28, 1887ல், பாரீஸ் ஈபிள் டவர் கட்ட துவங்கிய நாள். ஜன., 28, 1899ல், இந்திய ராணுவ முதன்மை அதிகாரி, கே.எம்.கரியப்பா பிறந்தநாள். ஜன., 28, 1925ல், பிரபல விஞ்ஞானி, ராஜா ராமண்ணா பிறந்தநாள். ஜன., 28, 1950ல், சுப்ரீம் கோர்ட், இந்தியாவில் துவக்கப்பட்ட நாள். ஜன., 28, 1986ல் விண்வெளி ஓடம் சேலஞ்சர், விண்ணுக்கு ஏவப்பட்ட, 72 வினாடிகளில் வெடித்து சிதறியது. அதில் பயணம் செய்த, ஏழு விண்வெளி வீரர்களும் இறந்தனர். ஜன., 28, 2002ல், போயிங் விமானம் 727-100; ஆண்டஸ் மலையில் மோதி, நொறுங்கியது. இந்த விபத்தில், 94 பேர் இறந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !