இதப்படிங்க முதல்ல...
ரஜினியை கொண்டாடும், வில்லன் நடிகர்கள்!தான் நடிக்கும் படங்களில், வில்லன் கதாபாத்திரங்கள் அழுத்தமாக இருந்தால் மட்டுமே, அதற்கு எதிராக, தான் சிறப்பாக நடிக்க முடியும் என்று, நினைக்கக் கூடியவர், ரஜினி. அதன் காரணமாகவே, தனக்கு இணையாக வில்லன்களுக்கும், 'ஓப்பனிங் சீன்' மற்றும் 'தீம் மியூசிக்' கொடுக்க வேண்டும் என்று, இயக்குனர்களை கேட்டுக் கொள்கிறார்.வில்லன்களை 'டம்மி' பண்ண சொல்லும், நடிகர்கள் மத்தியில், அவர்களை, 'கெத்'தாக காட்டுமாறு சொல்வதால், ரஜினி படத்தில் நடிக்கும், அத்தனை வில்லன்களும், அவர் பெருமை பேசி வருகின்றனர்.சினிமா பொன்னையாகணவருக்கு தோஷம் கழிக்கும், நயன்தாரா!நயன்தாராவின் கணவரான, விக்னேஷ் சிவன், அஜித்தின், 62வது படத்தை இயக்குவதாக இருந்து, கதை பிரச்னையால் வெளியேறினார். அதையடுத்து, கமலின், ராஜ்கமல் பிலிம்சுக்கு ஒரு படம் இயக்க இருந்து, அதிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில், லவ் டுடே படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதனை வைத்து, படம் இயக்கி வரும் அவர், அப்படத்துக்கு வைத்துள்ள, எல்ஐசி என்ற தலைப்பிற்கும் இப்போது எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால், கடுமையான, 'அப்செட்'டில் இருந்து வருகிறார், விக்னேஷ் சிவன்.எனவே, 'என் சொந்த ஊரான, கேரளா அழைத்து சென்று, அவரை துரத்தி வரும் பிரச்னைகளிலிருந்து விடுபட, தோஷம் நீங்கும் பரிகார பூஜைகள் நடத்த திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார், நயன்தாரா. — எலீசாயோகி பாபு உடன் கூட்டணி அமைத்த, இனியா!வாகை சூடவா படத்தில் நடித்து, பிரபலமான நடிகை, இனியாவுக்கு, பொட்டு படத்திற்கு பிறகு, சரியான பட வாய்ப்புகள் இல்லை. தற்போது, எடை கூடி, பெரிய அளவில் பெருத்து விட்டார்.இதனால், 'ஹீரோயின்' வாய்ப்பு கொடுக்க யாரும் முன்வராத நிலையில், தற்போது, யோகி பாபுவுக்கு ஜோடியாக, துாக்குத்துரை என்ற படத்தில் நடித்திருக்கிறார், இனியா.'இந்த படத்தில், காமெடி கலந்த வேடத்தில் நடித்திருக்கும் நான், தொடர்ந்து இதே காமெடி 'ரூட்'டில் பயணிக்க உள்ளேன்...' என்று, கூறுகிறார். — எலீசாசிவராஜ் குமார் போடும் நிபந்தனை!ஜெயிலர் மற்றும் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்தார், கன்னட நடிகரான சிவராஜ் குமார். இந்த படங்கள், கன்னடத்திலும் வெளியானது.'ஜெயிலர் படம் அளவுக்கு, கேப்டன் மில்லர் படத்தில், என் கேரக்டரை அழுத்தமாக வடிவமைக்காததால், கன்னட ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, இங்குள்ள, 'ஹீரோ'களுக்கு இணையாக, என் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீங்கள், என்னை, 'டம்மி' பண்ணினால், இந்த படங்கள், கன்னடத்தில் சொதப்பி விடும்...' என்று சொல்லியே, புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார், சிவராஜ் குமார்.சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!புயல் காமெடியன், குணச்சித்ர வேடத்தில் நடித்த படம், 'சூப்பர் ஹிட்' ஆனது. எனிலும், அடுத்தடுத்து, அழுகாச்சி கதைகளாக வந்ததால், உடனடியாக, தான் எந்த புதிய படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என்று, கூறி வந்தார். ஆனால், கோலிவுட்டில் வேறு மாதிரி சொல்கின்றனர்.அதாவது, அவர் நடித்த படத்தின் வெற்றியை அடுத்து, மேல் தட்டு, 'ஹீரோ'கள் அளவிற்கு, பல கோடி ரூபாய் வரை, படக் கூலி கேட்டு, 'டிமாண்ட்' செய்திருக்கிறார், புயல் காமெடியன்.இதையடுத்து, 'அவ்வளவு பெரிய பட்ஜெட்டில், இவரை, வைத்து படம் எடுத்தால், நாம் போண்டி ஆகிவிடுவோம்...' என்று, ஓட்டம் பிடித்துள்ளனர், தயாரிப்பாளர்கள். அதனால் தான், புதிய படங்கள் உடனடியாக ஒப்பந்தமாகாமல் இருந்து வந்துள்ளார், மேற்படி காமெடியன்.சினி துளிகள்!* 'சிம்புவுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது தான், என் லட்சியம்...' என்கிறார், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும், தேவயானி சர்மா.* ஹிந்தியில், அஜய்தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும், சைத்தான் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார், ஜோதிகா. இப்படத்தில், மாதவனும் இன்னொரு, 'ஹீரோ'வாக நடிக்கிறார். அந்த வகையில், தமிழில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், டும் டும் டும் என்ற படத்தில், மாதவனுடன் இணைந்து நடித்த ஜோதிகா, மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்.* மாமன்னன் படத்தை அடுத்து, மீண்டும், பகத் பாசிலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் வடிவேலு. அந்த படம் ரோடு டிராவல் கதையில் உருவாகிறது.அவ்ளோதான்!