கவிதைச்சோலை - வீரம்!
ஜல்லிக்கட்டு காளையைஅடக்குவது மட்டுமல்ல...அடங்க மறுக்கும்மனதை அடக்குவதும்வீரம் தான்!இளவட்டக் கல்லைதோளுக்கு மேல் சுழற்றிவீசுவது மட்டுமல்ல...இலகுவான வார்த்தைகளைஇதமாக பேசுவதும்வீரம் தான்!குத்துச் சண்டையில்எதிராளியை குத்து விட்டுவீழ்த்துவது மட்டுமல்ல...குடும்பச் சண்டையில்பங்காளியை மன்னித்துவாழ்த்துவதும்ஒரு வகை வீரம் தான்!பிரச்னைகள் பாம்பைப் போல்படமெடுத்து ஆடும்போதுபொறுமை எனும்மகுடியால் அடக்குவதும்வீரம் தான்!கோபம்எரிமலை போல்குமுறும்போதுவெடித்துச் சிதறாமல்அமைதி காப்பதும்வீரம் தான்!ஆத்திரம்ஆற்று வெள்ளம் போல்அடங்காமல் வரும்போதுஅணை கட்டி தடுப்பதும்வீரம் தான்!லஞ்சம் வாங்கமன விரல்கள் நீளும்போதுகையை தடுத்துகையூட்டு வாங்காமல்கடமையை செய்வதும்வீரம் தான்!சிகரத்தில் ஏறிகொடி நாட்டுவது மட்டுமல்லவீட்டுக்கொரு மரம் நட்டு வளர்ப்பதும் மனிதனுக்குவீரம் தான்!தன் பலத்தைவெளிச்சம் போட்டுகாட்டுவதல்ல...மனித நேயமுள்ளமனிதனாய் - தன்னைகாத்துக் கொள்வதும்வீரம் தான்!— என். ஆசைத்தம்பி, சென்னை.