கவிதைச்சோலை - அடையாளம்!
உங்கள் அடையாளத்தைசூட்டிய பெயரிலோபரம்பரை சொத்திலோபடித்த படிப்பிலோ வைக்காதீர்...கனிவோடு செய்கிற சேவைகளில் வைத்திடுங்கள்!உங்கள் அடையாளத்தைவசித்த இடத்திலோவாங்கிய பதக்கங்களிலோஇருக்கிற சேமிப்பிலோவைக்காதீர்...இல்லாதோர் மீதான இரக்கத்தில் வைத்திடுங்கள்!உங்கள் அடையாளத்தைநிறைந்த திறமையிலோஅடைந்த புகழிலோஈட்டிய வாழ்த்துக்களிலோவைக்காதீர்...தடுமாற்றம் இல்லாத நேர்மையில் வைத்திடுங்கள்!உங்கள் அடையாளத்தைவகித்த பதவிகளிலோசூழும் சுற்றங்களிலோதொடரும் வாரிசுகளிலோவைக்காதீர்...வாக்கில் நிலைக்கும் உண்மையில் வைத்திடுங்கள்!உங்கள் அடையாளத்தைகிடைத்த அதிகாரத்திலோஎழும்பும் சிலைகளிலோசேர்ந்திடும் பட்டங்களிலோவைக்காதீர்...மனதில் உறையும்மனிதாபிமானத்தில் வைத்திடுங்கள்!உங்கள் அடையாளத்தைஅச்சுறுத்தும் கோபத்திலோஅளவில்லா அடக்குமுறையிலோகருணையில்லா அதிரடியிலோவைக்காதீர்...அன்பினால் பூத்திடும்புன்னகையில் வைத்திடுங்கள்!— ஆர்.செந்தில்குமார், மதுரை.