ஹிந்து மத கர்னலுக்கு கிடைத்த புகழ்!
தங்கள் நாட்டின், சர்வதேச விமான நிலையத்திற்கு, ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரை சூட்டியுள்ளது, இந்தோனேஷியா.இந்தோனேஷியாவில் பிறந்த, ஹிந்து மதத்தைச் சேர்ந்த காஸ்தி கவுரா ராய் என்பவர் ராணுவத்தில், சேர்ந்து கர்னலாக உயர் பதவி வகித்தார். இவர், டச்சு ஆக்கிரமிப்பில் இருந்த தன் தாய் நாட்டை மீட்க கடுமையாகப் போராடி, அதில் வெற்றியும் கண்டார்.கவுரா ராயின் வீரம் மற்றும் தியாகத்தை பாராட்டி, அவருக்கு அந்நாட்டில் தபால் தலைகள் வெளியிடப்பட்டு, சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.கவுரா ராயை கவுரவிக்கும் வகையில், இந்நாட்டின், பாலி சர்வதேச விமான நிலையத்திற்குத் தான், அவரது பெயரை சூட்டியுள்ளது.இந்த விமான நிலையத்திற்குள், ஹிந்து மதக் கடவுள்களின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. ஜோல்னாபையன்