உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - கோணங்கள்!

அன்பும், பாசமும் வெறும்வார்த்தைகள் அல்லசமூக நல்லிணக்கம்பற்றிடும் விழுதுகள்!சக மனிதனை அழித்துவாழ்வது, வாழ்க்கை அல்லசகோதர தன்மையோடுவாழ்வதே சமத்துவம்!கோவில் - பாவம் செய்துபரிகாரம் தேடும் இடமல்லஅகமும், புறமும் துாய்மைதேடும், ஆன்மிக பள்ளி!தீராத பகை உணர்வுடன்வன்மம் காணும் பூமியல்லஅகிம்சையும், அற வழியும்முத்திரை பதித்த பூமி!கருவறையில் பெண் சிசுஅழிக்கும் காலம் அல்லசரி நிகர் போற்றும் பெண்வலிமை பெறும் காலம்!அரசாட்சி தன்னலம்ஈர்க்கும் பணியல்லநாட்டுக்கும், மக்களுக்கும்நலன் காத்திடும் பணி!மதம், இனம் வேற்றுமைதீப்பொறியில் வீழ்வதல்லஜனநாயக நீரோட்டத்தில்கலந்த ஒரு தாய் மக்கள்!மனிதன் சிறந்து வாழஉழைப்பு வேண்டும்மனிதம் நிலைத்து நிற்கஅர்ப்பணிப்பு வேண்டும்!— வி. சுவாமிநாதன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !