மனைவியை விருந்தாக்கும் கணவன்கள்!
வீட்டிற்கு வரும் விருந்தினர்கள், அறிமுகம் இல்லாத நபர்களுக்கு, தங்கள் மனைவியை, ஒப்படைக்கும் கிராமம் ஒன்று இருக்கிறது. ஆப்ரிக்க நாடுகளுள் ஒன்றான, நமீபியாவில், ஹிம்பா பழங்குடியினரிடம் தான், இந்த பழக்கம் உள்ளது.இன்று, இந்தப் பழங்குடியினர், சுமார், 50 ஆயிரம் பேர் உள்ளனர். பல நுாற்றாண்டுகளுக்கு முன்பான பழக்க வழக்கங்களை, இன்றும் கடைப்பிடிக்கின்றனர். உலக முன்னேற்றம் மற்றும் அறிவியல் வளர்ச்சி அடைந்தும், அவர்கள் மாறவில்லை.இந்தப் பழங்குடியினரில், வெளியூர்களில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு, உணவுடன், வீட்டுப் பெண்களும் சேர்ந்து பரிமாறப்படுவதாக சொல்லப்படுகிறது. இதற்காக, அவர்கள் வீட்டில் தனி அறை ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்தப் பழங்குடி இனத்தில், குளிப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தண்ணீரில் குளிப்பதற்குப் பதிலாக, புகை போட்டுக் குளிப்பர். இது, 'புகை குளியல்' என்று அழைக்கப்படுகிறது.— -ஜோல்னாபையன்